தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் ரூ 7.40 கோடியில் பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணி தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார்

26 Dec 2025, 4:32 pm
தேனி மீறு சமுத்திரம் கண்மாயில்  ரூ 7.40 கோடியில்  பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணி தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார்
<p><strong>தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் &nbsp;ரூ 7.40 கோடியில் &nbsp;பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணி தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார்</strong></p> <p>தேனி ,டிச.26- தேனியில் உள்ள &nbsp; மீறு சமுத்திரம் &nbsp;கண்மாயில் 7 கோடி 40 லட்சம் ரூபாய் மதிப் பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் நவீ னப்படுத்தும் பணியை தேனி &nbsp;மக்களவை உறுப்பினர் &nbsp;தங்க தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார் . தேனி அல்லிநகரம் நக ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மீறு சமுத்திரம் கண்மாய். சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள &nbsp;இந்த கண்மாய் தண்ணீர் நகர் பகுதிகளில் உள்ள மக்களு க்கு நிலத்தடி நீர் ஆதாரமாக மட்டுமே விளங்குகிறது. இந்த குளத்தில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய படகு குழாம் அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் பல ஆண்டு கால கோரிக்கை ஆகும் .இந் நிலையில் மீறு சமுத்திரம் கண்மாயில் பொழுது போக்கு அம்சங்களுடன் நவீ னப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் 7 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற ஒப்பு தல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை &nbsp; மீறுசமுத்திரம் கண் மாயில் பணிகள் மேற் கொள்வதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது .இந்த கண்மா யில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி, நடைபாதைகள் அமைத்து, படகு நிறுத்துவதற்கான இடம் அமைத்தல், சிறுவர் பூங்கா போன்ற பொழுது போக்கு அம்சங்கள் வர உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சரவண குமார்,தேனி நகர்மன்ற தலைவர் ரேனுப்பிரியா பாலமுருகன் ,நகர் செய லாளர் நாராயணபாண்டி உட்பட நீர்வளத்துறை அதி காரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.