முந்தய பக்கம்

தண்டலம் ஏரி கால்வாயில் தூர்வாரும் பணி தொய்வு: கொசுத் தொல்லையால் மக்கள் அவதி!

3 Jun 2026, 11:23 pm
தண்டலம் ஏரி கால்வாயில் தூர்வாரும் பணி தொய்வு:  கொசுத் தொல்லையால் மக்கள் அவதி!
<p><strong>தண்டலம் ஏரி கால்வாயில் தூர்வாரும் பணி தொய்வு: கொசுத் தொல்லையால் மக்கள் அவதி!</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 3- வாலாஜா வட்டத் திற்குட்பட்ட தண்டலம் ஏரி யின் உபரி நீர் கால்வாயில் அரைகுறையாகத் தூர் வாரும் பணி நடந்துள்ள தால், டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நவல்பூர் பகுதி மக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். தண்டலம் ஏரி முதல் பாலாறு வரை செல்லும் இந்த உபரி நீர் கால்வாயைத் தூர் வார மாவட்ட நிர்வா கம் சார்பில் ஒப்பந்தம் செய்ய ப்பட்டுப் பணிகள் தொடங் கின. ஆனால், வள்ளலார் நகர் மற்றும் களத்து மேடு தெருவின் பின்புறப் பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெற வில்லை என்றும், அதி காரிகள் கண்காணிப்பு குறை பாடே இதற்குக் காரணம் என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். தூர்வாரப்படாததால் கால்வாயில் குப்பைகள் அடைத்து, கழிவுநீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகரித் துள்ளதுடன், விஷப் பூச்சி களின் நடமாட்டமும் அதிகரி த்துள்ளது. எனவே, இராணி ப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, விடுபட்ட பகுதிகளில் தூர் வாரும் பணியை முழுமை யாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram