தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலவில் கால் வைத்ததை விட... - சீனிவாசன் ரமணி

9 Nov 2025, 2:21 pm
நிலவில் கால் வைத்ததை விட... -  சீனிவாசன் ரமணி

நிலவில் கால் வைத்ததை விட...

1960களின் பிற்பகுதியில் வெளியான சத்யஜித்ரேயின் பிரதித்வந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. படத்தின் கதாநாயகன் சித்தார்த்தா ஒரு நேர்காணலை எதிர்கொள்வார். நேர்காணல் காண்போர் அவரிடம், “கடந்த பத்தாண்டு காலத்தில் நடந்த மிகவும் நிகரற்ற நிகழ்வாக நீங்கள் கருதுவது எது?” என்ற ஒரு கேள்வியைக் கேட்பார்கள்.

அதற்கு சித்தார்த்தா, சிறிதும் தயக்க மின்றி, “வியட்நாம் யுத்தம்” என்று பதில ளிப்பார். அதற்கு நேர்காணல் காண்போர், “மனிதன் சந்திரனில் கால் வைத்ததைக் காட்டிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றா அது?” என்று மீண்டும் கேட்பார்கள். அதற்கு சித்தார்த்தா, “ஆம். சந்திரனில்  கால் வைப்பதை நாம் நன்கு திட்டமிட்டு  செயல்படுத்தினோம். விண்வெளி தொழில்  நுட்பத்தில் நாம் நன்கு முன்னேறியிருக்கி றோம். அது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்,  எனினும் கணிக்க முடியாத ஒன்றல்ல.  ஆனால், வியட்நாம் போர் அப்படிப்பட்ட தல்ல. அது வியட்நாம் மக்களின் அபார மான எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தி யது… அவர்கள் மிகவும் சாமானியர்கள், சாமானிய விவசாயிகள். அவர்களிடம் இத்தகு அபார எதிர்ப்பு சக்தி இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. இது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை  அல்ல. இது அவர்களின் துணிச்சலைப்  பற்றியதாகும். இதைக் கேள்வியுறும்போது  உங்கள் மூச்சே நின்றுவிடும்.” உடனே நேர்காணல் காண்போர், “நீ ஒரு  கம்யூனிஸ்டா?” என்று கேட்பார்கள். “வியட்நாமியர்களைப் பாராட்டு வதற்கு ஒருவர் கம்யூனிஸ்டாகத்தான் இருக்க வேண்டும் என்கிற தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்,” என்று சித்தார்த்தா பதில் கூறுவார். சுதந்திரத்துக்கான தீராப்பசி இது ஒரு திரைப்படத்தின் உரையாட லாக இருக்கலாம், ஆனால் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு குறிப்பாக ஏழை மற்  றும் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு,  தங்கள் பிரிக்கப்பட்ட நாட்டை மீண்டும்  ஒன்றிணைப்பதற்காக வியட்நாமியர் நடத்திய போராட்டம் உத்வேகத்தை அளிக் கக்கூடிய ஒன்றாகவே அமைந்துள்ளது. அதிநவீன ஆயுதங்களுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட தாக்கு தலை, விவசாயிகளாகிய வியட்நாமியர் தங்கள் விவசாய அறிவையும் புத்தி சாலித்தனத்தையுமே நம்பி எதிர்த்து நின்று  சமர்புரிந்தனர். முன்னாள் சோசலிச முகா மின் பிற நாடுகளிடமிருந்து அவர்களுக்கு  உதவி கிடைத்தாலும், அவர்களின் வெற்றிக்கு பெரும்பாலும் அவர்களின்  சொந்த உத்திகளையும் நடைமுறைத் தந்தி ரங்களையும் பிரயோகப்படுத்தியதும், சுதந்திரத்திற்கான அவர்களின் தீராப்பசி யுமே காரணமாகும். இன்றைய வியட்நாமியரின் சிந்தனை யோட்டத்தை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வியட்நா மில் ஆகஸ்ட் 30 அன்று வியட்நாம் மீளவும்  இணைந்த 50ஆவது ஆண்டைக் கொண்டா டும் வைபவம் நடைபெற்ற சமயத்தில் அதில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். வியட்நாம் இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் உயர் நடுத்தர வருமான பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கடும்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தென் வியட்நாமின் தலைநகராக இருந்த சைகோன் என்னும் ஹோசிமின் நகரத் தினை இப்போது பார்க்கும்போது யுத்தம்  நடைபெற்ற சுவடுகள் அதிகமாகத் தெரியவில்லை. எனினும், நகரத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள கூ சி  (Cu Chi) சுரங்கப்பாதைகள், வியட்நாமி யர்கள் தங்கள் எதிரிகளை எவ்வாறு தங்கள்  மன உறுதியால் வெல்ல முடிந்தது என்பதைக் காட்டுகின்றன. 250 கி.மீ. சுரங்கப் பாதை வளாகம் வெறும் மண்வெட்டிகள் மற்றும் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தி, வியட்நாமிய எதிர்ப்புப் படைகள் 250 கிமீ  நீளமுள்ள மூன்று அடுக்கு சுரங்கப் பாதை வளாகத்தைக் கட்டினார்கள். இந்த  சுரங்கப் பாதைகள் எளிய காற்றோட்ட  வசதிகளுடனும், தண்ணீர் கிணறுகளுட னும், ஓய்வெடுக்கும் அறைகளுடனும், (புகை கண்டறிதலைத் தவிர்க்க கவனமாக வடிவமைக்கப்பட்ட புகைபோக்கிகளுடன் கூடிய) சமையலறைகளுடனும் அமைக்  கப்பட்டன. இராணுவ பதுங்கு குழிகள்,  மருத்துவ வசதிகள் மற்றும் எதிரிகளைத்  தாக்க துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு உத வும் உருமறைப்புப் பகுதிகள் ஆகிய வற்றையும் இவை கொண்டிருந்தன. இந்த  வளாகத்தை உருவாக்கப் பயன்படுத்தப் ட்ட பெரும்பாலான கருவிகள் இரும்பு காலத்தைப் (Iron Age) போலவே பழமை யானவை. ஆனாலும் அவை இன்னமும் அமெரிக்கர்கள் மத்தியிலும், தென் வியட்நாமிய காலாட்படையினர் மத்தியி லும் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்குழு போதுமானதாக இருந்தன. அவர்களுக்கெதிரான  அவர்களின் குண்டுகள் ஹோ சி மின் நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கேன்  ஜியோ சதுப்பு நிலக் காட்டில் கொரில்லா போராளிகளின் வீரக் கதைகளை வியட்நாமியர்கள் மீண்டும் எங்களிடம் கூறினார்கள். இங்கு, எளிய இடுப்புத் துணிகளை அணிந்து கொண்டு வியட் காங்  கொரில்லாக்கள், முதலைகள் நிறைந்த நீரில் நீந்தவது குறித்தும், சதுப்பு நிலக்  காடுகள் மற்றும் லாங் டாவ் நதி போன்ற  கடுமையான நிலப்பரப்பைப் பயன்படுத்தி,  அமெரிக்க கப்பல்கள் மற்றும் தெற்கு வியட்நாமிய கட்டடங்கள் மீது பதுங்கி யிருந்து தாக்குதல்களைத் தொடுத்ததை யும் உணர்ச்சிகரமாக விவரித்தார்கள். மிகவும் கொடூரமான நாபாம் குண்டு கள் மற்றும் கனரக பீரங்கிகள் தங்கள்  மீது வீசப்பட்டபோது, அவற்றிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் வெடிக்காத வற்றின் எச்சங்களை தங்கள் சொந்த பீரங்கி களுக்குப் பயன்படுத்தி அவர்களுக்கெதி ராகவே பயன்படுத்திய வீரத்தையும் விளக்கினார்கள். இவர்களின் ஆயுத மேந்திய போராட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், வியட்நாமிய விடுதலை இயக்கத்தின் மிக மாபெரும் தலைவரான ஹோ சி மின் மீதான அபரிமிதமான மரி யாதையைத் தவிர, தோழர்கள் அனை வரும் தனிநபர் துதி எதுவுமின்றி கூட்டுத் தலைமைக்குக் கட்டுப்பட்டு, உறுதியுடன் செயல்பட்டதாகும்.  இரு வியட்நாமும் ஒன்றாக இணைக்கப்  பட்ட 50ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்த சமயத்தில் அவர்கள், நியாயமான காரணத்திற்காக மன உறுதியுடன் போரா டினால் எவ்வளவு பெரிய மிருகத்தனமான சக்தியாக இருந்தாலும் அதனை விரட்டி அடித்து, வெல்ல முடியும் என்பதற்கு எங்க ளுக்கு மதிப்புமிக்க சான்றாக விளங்கி னார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.