குதிரை பேரப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
16 May 2026, 1:53 am
<p><strong>குதிரை பேரப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்</strong></p><p>சிதம்பரம், மே 15 சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சிதம்பரம் சட்டமன்ற அலு வலகத்தை முழுமையாகக் கணினி மய மாக்கி, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தொழில்நுட்பம் வாயிலாக மனுதாரர்க ளுக்குத் தெரிவிக்கும் வசதி செய்யப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ் மற்றும் அதிமுகவில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலை மையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென அரசுக்கு ஆதரவு தெரி வித்துள்ளதைக் குறிப்பிட்டார். இத்தகைய திடீர் நிலைப்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் குதிரை பேரம் மற்றும் யானை பேரம் நடப்பதாகப் பேசப்படுவதற்குக் காரணமாகியுள்ளன. சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளி யேயும் எழுந்துள்ள இந்த விவாதங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது. எனவே, குதிரை பேரம் என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.</p>
