நீதிக்காக நிற்கும் இந்திய மாணவர் சங்கம் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பாராட்டு
24 Jul 2026, 12:02 am
<p><strong>நீதிக்காக நிற்கும் இந்திய மாணவர் சங்கம் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பாராட்டு</strong></p><p>சிதம்பரம், ஜூலை 23- நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு முறைகேடு களுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் தில்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல்துறை யினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். நேரில் சந்தித்து ஆதரவு மாணவர்கள் கைது செய்யப்பட்ட தகவலையறிந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜன நாயகக் கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி, மண்டபத்திற்கு நேரில் சென்று கைது செய்யப்பட்ட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகை யில்,"தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து நீதிக்காக உறுதியுடன் குரல் கொடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்கால உரிமைகளுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டம் ஒருபோதும் வீணாகாது. உங்களின் நியாயமான ஜனநாயகப் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.</p>
