ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ அறிவிப்பு
14 Jun 2026, 1:03 am
<p><strong>ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ அறிவிப்பு</strong></p><p>சிதம்பரம், ஜூன் 13- சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிமுன் அன்சாரி தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் இந்துஸ்தான் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகள் தோண்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சுற்றுச்சூழலையும், மீனவர் நலன்களையும் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே, முந்தைய அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதையே இன்றைய அரசும் கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறினால் ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் ஒன்றுத் திரட்டி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம் என்றார்.</p>
