தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

8 Jul 2026, 11:20 pm
மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்  தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
<p><strong>மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 8- சிதம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பி னருமான தமிமுன் அன்சாரி செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசினார். மேகதாது அணை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். பி.சி.எம். சான்றிதழ் புதிதாக இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்களுக்கு &#39;பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்&#39; சான்றிதழ் வழங்க முடியாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு பல சிக்கல்களை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டினார். மேல்முறையீடு செய்வதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, மதம் மாறுபவர்களுக்கும் அந்தச் சான்றிதழ் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். என்எல்சி தனியார்மயம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய பாஜக அரசு எடுக்கும் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்தார். &quot;என்எல்சி பங்குகளை விற்க வேண்டிய சூழல் உருவானால், அதைத் தனி யாருக்கு விற்காமல் தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் இடது சாரிகளின் நிலைபாடே எனது நிலைப் பாடும்&quot; என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது, பொருளாளர் கேப்டன் சையது அகமது ஃபரூக், துணைத் தலைவர் ஜே.எஸ். ரிபாய் உள்ளிட்டோர் உரையாற்றினர். இணைப் பொதுச் செயலாளர் தாஜுதீன் வரவேற்புரை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.