முந்தய பக்கம்

தமிமுன் அன்சாரி ஒரு உண்மையான களப்போராளி!

8 Apr 2026, 5:30 am
தமிமுன் அன்சாரி ஒரு உண்மையான களப்போராளி!

தமிமுன் அன்சாரி ஒரு உண்மையான களப்போராளி!

கே.பாலகிருஷ்ணன் புகழாரம். சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஒரு சிறந்த களப்போராளி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜகவை வீழ்த்த அமைக்கப்பட்டுள்ள மாபெரும் கூட்டணி அரசியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தமிழகத்தில் பாஜக காலூன்றவிடக் கூடாது என்பதற்காக திமுக தலைமையில் 21 கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளன.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. அதில் ஒரு தொகுதியாக சிதம்பரம் இருக்க வேண்டும். மதவாத அரசியலுக்குச் சாட்டை அடி வேட்பாளர் தமிமுன் அன்சாரி மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர்.

Share
FacebookXWhatsAppTelegram