சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை புறக்கணிக்கும் வட இந்திய ஊடகங்கள் மு.தமிமுன் அன்சாரி விமர்சனம்
17 Jul 2026, 11:49 pm
<p><strong>சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை புறக்கணிக்கும் வட இந்திய ஊடகங்கள் மு.தமிமுன் அன்சாரி விமர்சனம்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 17- நீட் தேர்வு முறைகேடுக ளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 25 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வரும் நிலையில், வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணிப்பதாக, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார். முன்பு அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை ஃபாசிச ஆதரவு ஊடகங்கள் ஊதிப்பெருக்கி, காங்கிரஸ் அரசை வீழ்த்தக் கருவியாகப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது சோனம் வாங்சுக்கின் நியாயமான போராட்டத்தை ஊடகங்கள் கண்டு கொள்ளாததற்கு, அவர் பாசிச பின்னணியில் இல்லாததே காரணம் என்று விமர்சித்துள்ளார். கல்வித்துறையைப் பாசிச பிடியிலிருந்து மீட்க, ஜனநாயக சக்திகள் பிளவுபடாமல் ஒன்றிணைய வேண்டும் என்றும், மக்களின் மனசாட்சி விழித்துக்கொண்டு ஜனநாயக வழியில் வெகுண்டெழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதால், அவருக்கு உரிய மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் இந்தத் தேர்வு முறைகேடு களுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
