முந்தய பக்கம்

தாமரைக்குளம் கண்மாய் அளவிடும் பணி

26 May 2026, 10:21 pm
தாமரைக்குளம் கண்மாய் அளவிடும் பணி
<p><strong>தாமரைக்குளம் கண்மாய் அளவிடும் பணி</strong></p><p>தேனி, மார்ச் 26- பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயை அளவீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் தாரைக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 112 ஏக்க ருக்கு மேல் உள்ளது. இந்த கண்மாய் பகுதி யில் பெரியகுளம் பாரதிநகர் பகுதியில் புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. அதே போல், தாமரைக்குளம் சாலையி லும், பேரூராட்சி அலுவலகமும் ஆக்கிர மிப்பில் உள்ளது. மேலும், பேரூராட்சி சார்பில் கண்மாயில் தென்னை மரங்களை நட்டு குத்தகை விட்டு வருகின்றனர். கழிவுநீர் கண்மாயில் கலக்கிறது. இதையடுத்து கண் மாயை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மையான தண்ணீராக இருக்க வேண்டும் என தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கண்மாயை அளவீடு செய்யும் பணி சோத்துப்பாறை அணை உதவி செயற்பொறியாளர் மகேஷ் தலை மையில் நடைபெற்றது. இந்தப் பணியில் தலைமை சர்வேயர் ஜெகன், குறுவட்ட நில அளவர்கள் சக்திவேல், கண்ணன் ஆகி யோர் கண்மாயின் மேற்கு பகுதியில் அள வீடு செய்து, கற்களை ஊன்றினர். அதே போல், மேல் வடக்குப்பகுதி, தெற்கு, கிழக்குப்பகுதியில் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று, கற்கள் ஊன்றப்படும். மேலும், ஆக்கிர மிப்பு இருந்தால் நோட்டீஸ் வழங்கி ஆக்கிர மிப்புகளை அகற்றப்படும் என பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram