தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் சுமுக உடன்பாடு
21 Feb 2026, 3:26 pm
<p><strong>தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் சுமுக உடன்பாடு</strong></p>
<p>தளவாய்புரம், பிப்.21- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலைகளில் பணி யாற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் சுமுகமாக நிறைவு பெற்றது. தளவாய்புரம் வட்டார விசைத்தறி உற்பத்தியாளர்களின் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் முந்தைய மூன்று ஆண்டுக் கூலி ஒப்பந்தம் 10.2.2026 அன்று முடிவடைந்தது. இதையடுத்து, 2026 முதல் 2029 வரை மூன்று ஆண்டுக் காலத் திற்கு உற்பத்தி செலவு மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 50 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என தொழி லாளர்கள் கோரிக்கை வைத்து போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மதுரை தொழிலாளர் நல ஆணையத்தின் உதவி ஆணையர் முன்னி லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சிஐடியு சார்பில் ராமர், சந்தன குமார், ராசு மற்றும் ஏஐடியுசி சார்பில் வழக்க றிஞர் பகத்சிங், அய்யணன், அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அம்மை யப்பமூர்த்தி, அறிவு உள்ளிட்டோர் பங்கேற் றனர். பேச்சுவார்த்தை முடிவில் 11.2.2026 முதல் 11.2.2029 வரை மூன்று ஆண்டு களுக்கான கூலி உயர்வு 6 சதவீதம் + 6 சத வீதம் + 5 சதவீதம் என மொத்தம் 17 சத வீதம் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட் டது. அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் திட்டமிடப் பட்டிருந்த வேலைநிறுத்தம் தவிர்க்கப் பட்டு தொழிற்சாலைகளின் இயல்பு நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
