முந்தய பக்கம்

தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள்

yesterday
தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள்
<p><strong>தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள்</strong></p><p>ஈரோடு, ஜூன் 21- தாளவாடியில் விவசாய நிலத் திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்த தவறியதை கண் டித்து, வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்க ளில் புகுந்து விவசாயப் பயிர்களை தினமும் சேதப்படுத்துகின்றன. அதேபோல, இரவு நேரத்தில் காவ லுக்கு செல்லும் கிராம மக்களை யானைகள் தாக்குவதும் தொடர் கிறது. இந்நிலையில், தாளவாடி சுற்றுவட்டாரத்தில் மல்லன்குழி, திகினாரை. கரவளாடி ஆகிய பகுதி களில் ராகி, சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன, யானைகள் தொடர்பாக தகவல் அளித்தால்கூட சம்பவ இடத்துக்கு வனத் துறையினர் வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு வரு வாய் இழப்பு ஏற்படுகிறது. இதைய டுத்து ஊருக்குள் புகும் யானை, காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக் குள் விரட்ட வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி தாளவாடி வனச்சரக அலு வலகத்தை விவசாயிகள் சனியன்று முற்றுகையிட்டனர். இதையடுத்து யானைகளை விரட்ட வனவர், வன ஊழியர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டதை தொடர்ந்து, விவசாயி கள் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram