தக்கார் குரல் மாத இதழ் 2ஆம் ஆண்டு துவக்க விழா
6 Oct 2026, 1:36 am
<p><strong>தக்கார் குரல் மாத இதழ் 2ஆம் ஆண்டு துவக்க விழா</strong></p><p>சென்னை, அக்.5-தக்கார்குரல் மாதஇதழின் 2ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ‘மறைநதி விருது - 2026’ வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.ஜோதிமணி, முதலமைச்சரின் உதவி மையத் துணை ஆட்சியர் டீ.முரளி, சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் ஆர்.ஹாசீப், சென்னை யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் பொதுச் செயலாளர் ஷபீர் அகமது, தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.ராம்ஜி, எம்யூஜெ பொதுச்செயலாளர் பி.கோபி, தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் பொதுச் செயலாளர் பி.ஆர்.வேளாங்கன், சென்னை மாவட்டத் தலைவர் ம.மீ.ஜாபர் உள்ளிட்ட சகோதர அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p>
