தாய்சோலை எஸ்டேட் விவசாயிகள் பிரச்சினை வட்டாட்சியர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை
6 Jan 2026, 4:23 pm
<p><strong>தாய்சோலை எஸ்டேட் விவசாயிகள் பிரச்சினை வட்டாட்சியர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை</strong></p>
<p>உதகை, ஜன. 6- தாய்சோலை எஸ்டேட் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவிக்கப் பட்டிருந்த போராட்டம், வட்டாட்சியர் நடத் திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ள னர். நீலகிரி மாவட்டம், தாய்சோலை எஸ்டேட் நிர்வாகம் விவசாயிகளுக்கு இடையூறாக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் குந்தா தாலுகா குழு சார்பில் திங்களன்று மஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. விவ சாயிகளின் நிலங்களுக்கு செல்லும் வழியை மறித்தல் உள்ளிட்ட புகார்களை முன்னிறுத்தி இந்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குந்தா தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் திங்களன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் எஸ் டேட் நிர்வாகத் தரப்பினர் கலந்துகொண்ட னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வாசு மற்றும் நிர்வாகிகள், விவசாய நிலங்களுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் செல்லும் வழியில் எஸ்டேட் நிர்வாகத்தால் தன்னிச்சை யாக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.தேயிலை இலை பறிக்கச் செல்லவும், உரங் களை கொண்டு செல்லவும், தொழிலா ளர்களை அழைத்துச் செல்லவும் எஸ்டேட் நிர்வாகம் எவ்விதத் தடையும் விதிக்கக்கூடாது. வாகனப் போக்குவரத் திற்கு மிரட்டலோ அல்லது அச்சுறுத்தலோ விடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தனர். விவசாயிகளின் தரப்பு நியாயங்களை கேட்டறிந்த வட்டாட்சியர், இக்கோரிக்கை கள் குறித்து வருவாய் கோட்டாட்சியருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், வரும் புதனன்று தனமந்தோரை பகுதிக்கு நேரடி யாக சென்று ஆய்வு மேற்கொண்டு, விவசா யிகளின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று போராட்டம் தற் காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் என்.வாசு, கிளைச் செயலாளர் மதேவன், மாவட்ட நிர்வாகி அலியார் மற்றும் மூத்த தோழர்கள் ஆல்தொரை, மதன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எஸ்டேட் நிர்வாகம் சார் பில் மேலாளர் சுசை அருளப்பன், தொழிற் சாலை மேலாளர் வனத்தராஜ் ஆகியோரும், அரசுத் தரப்பில் மஞ்சூர் காவல் உதவி ஆய் வாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p>
