விளையாட்டு
15 May 2026, 11:07 pm

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி

தாய்லாந்து ஓபன் பேட்மிண் டன் தொடரின் 38ஆவது சீசன் பாங்காக்கில் உள்ள நிமிபுத்தர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் நாட்டின் நோமுரா - யூச்சி ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே மிரட்டலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராங்கி - சிராக் ஜோடி 21-12, 21-13 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து சனியன்று நடை பெறும் அரையிறுதி ஆட்டத்தில் தரவரி சையில் 3ஆவது இடத்தில் உள்ள மலே சியாவின் பெய் - இஜுதீன் ஜோடியை இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி எதிர்கொள்கிறது. பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு காலி றுதி ஆட்டத்தில் உலக தரவரிசை யில் 6ஆவது இடத்தில் உள்ள இந்தி யாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ஜப்பானின் யாமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கத்தில் அசத்தலாக விளையாடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-19 கைப்பற்றினார். எனினும் 2ஆவது செட் முதல் சுதாரித்து கொண்ட ஜப்பானின் யாமகுச்சி அதிரடியில் இறங்கினார். கடைசி 2 செட்களையும் அவர் கைப்பற்றினார். இறுதியில் யாமகுச்சி 19-21, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி னார். வெற்றிக்காக கடுமையாக போராடிய பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதியில் சுவிட்டோலினா

களிமண் தரையில் நடைபெறும் டென்னிஸ் போட்டி களில் ஒன்றான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் 83ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று நடை பெற்ற மகளிர் ஒற்றை யர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரி சையில் 4ஆவது இட த்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தர வரிசையில் 7ஆவது இடத்தில் உக்ரைனின் சுவிட்டோலினாவை எதிர்கொ ண்டார். யாரும் எதிர்பாராத வகையில் தொடக்க கேம் முதல் ஆதிக்கம் செலுத்திய சுவிட்டோலினா 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற கிராண்ட்ஸ்லாம் நாயகியான போலந்தின் ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.

குத்துச் சண்டை தகுதிச் சுற்று நிகாத் ஜரீன் வெளியேற்றம்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் (தகுதிச் சுற்று) உலக ஜூனியர் சாம்பியன் சாக்சி சவுத்ரியிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் இருமுறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன். இதன்மூலம் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இருந்து நிகாத் ஜரீன் வெளியேறினார்.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - குஜராத் இடம் : கொல்கத்தா, மேற்கு வங்கம் / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)