விளையாட்டு
16 May 2026, 10:18 pm

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் ராங்கி - சிராக் ஜோடி கலக்கல் ; இறுதிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பேட் மிண்டன் தொடரின் 38 ஆவது சீசன் பாங்காக்கில் உள்ள நிமிபுத்தர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலி டத்தில் உள்ள இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள மலேசியாவின் பெய் - இஜுதீன் ஜோடியை எதிர் கொண்டது. தொடக்கத்தில் அதி ரடியாக விளையாடிய மலேசிய ஜோடி முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் மனம் தளராமல் போராடிய இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி 2ஆவது செட்டை 22-20 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2ஆவது செட் மிக பரபரப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி அந்த செட்டை 21-16 கணக்கில் கைப்பற்றியது. இறுதியில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி 19-21, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் லியோ - டேனியல் ஜோடியை ராங்கி - சிராக் ஜோடி எதிர்கொள்கிறது என்பது குறிப்பி டத்தக்கது.

ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட ஹசன் அலி

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, சனிக்கிழமை நடை பெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, தனது முதல் ஓவரிலேயே காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். சில்ஹெட்டில் (வங்கதேசம்) நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. 8ஆவது ஓவரை ஹசன் அலி வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தில் வங்கதேச அணியின் அறிமுகத் தொடக்க வீரர் தன்சித் ஹசன் பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற ஹசன் அலி, முன்னோக்கிப் பாய்ந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தரையில் அவர் நிலைதடுமாறி விழுந்தார். ஆடுகளத்தின் அருகே குப்புறப் படுத்துக் கிடந்த ஹசன் அலியை, பாகிஸ் தான் அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக மைதா னத்திற்குள் வந்து பரிசோதித்தார். அவர் எழுந்தபோது சற்றே மயக்க நிலையில் காணப்பட்டதால், அவரை வெளியே அழைத்துச் செல்ல ‘ஸ்ட்ரெச்சர்’ வரவ ழைக்கப்பட்டது. ஹசன் அலி வீசி முடிக்காத அந்த ஓவரின் மீதிப் பந்துகளை சல்மான் ஆகா வீசி முடித்தார். எனினும் சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் மைதானத்திற்குத் திரும்பி பந்துவீசத் தொடங்கினார்.

ஐபிஎல் : இன்றைய ஆட்டங்கள்

பஞ்சாப் - பெங்களுரூ இடம் : தர்மசாலா, இமாச்சலப்பிரதேசம் மதியம் 3:30 மணி

தில்லி - ராஜஸ்தான் இடம் : தில்லி மைதானம் இரவு 7:30 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)