தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

17 May 2026, 9:04 pm
விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 38ஆவது சீசன் பாங்காக்கில் உள்ள நிமிபுத்தர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் ஞாயிறன்று நடைபெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, தரவரிசையில் இல்லாத இந்தோனேசியாவின் லியோ - டேனியல் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய லியோ - டேனியல் ஜோடி, 21-12, 25-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் சிறப்பாக விளை யாடி வந்த இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வியுடன் இரண்டாம் இடம் பிடித்தது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா உயிரோடு தான் இருக்கிறார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32ஆவது வயதில் காலமானதாக, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கரீம் ஜனத் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் இரங்கல் குறிப்புடன் (மொழி பெயர்ப்பின் மூலம் ஆங்கிலத்தில் பார்த்து அறிந்து கொண்டது) பதிவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் ரஹ்மத் ஷாவின் தாயார் தான் காலமானார் என்பது தற்போது தெரியவந்தது. கரீம் ஜனத் ‘பஷ்தூ’ மொழியில் (ஆப்கா னிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று) பதிவிட்டிருந்த இரங்கல் செய்தி அவரது தாயாருக் கானதே தவிர, கிரிக்கெட் வீரருக்கா னது அல்ல என்பது உறுதியாகி யுள்ளது. கரீம் ஜனத்தின் பதிவை இன்ஸ்டா கிராம் செயலி தானாகவே (Auto mated Translation) மொழி பெயர்த்திருந்தது. ஆழமாக ஆராய்ந்த போது, இன்ஸ்டாகிராமில் உள்ள அந்த தானியங்கி மொழிபெயர்ப்பு சரியாக இல்லை. அது ஒட்டுமொத்த அர்த்தத்தையே மாற்றிவிட்டது என்பதும் தெரியவந்தது. ரஹ்மத் ஷா நலமாக இருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதே வேளையில், சமூக வலைத்தளங் களில் சரிபார்க்கப்படாத தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பயனர்களைக் கேட்டுக் கொண்டனர். காயம் தான் தவறான தகவலுக்கும் காரணம் ரஹ்மத் ஷா கடந்த ஆண்டு அக்டோ பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக கடைசியாக விளையாடினார். துரதிர்ஷ்டவசமாக, காயம் காரணமாக அவர் அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார். அதிலிருந்து கிரிக்கெட் உலகில் பெரியளவில் தலைகாட்டாமல் உள்ளார். இதனால் தான் ரஹ்மத் ஷா காயமடைந்த நிலையில் உயிரிழந்துவிட்டார் என தகவல் வேகமாக பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

சென்னை - ஹைதராபாத் இடம் : சென்னை, தமிழ்நாடு / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

இந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி கண்டால் ப்ளே ஆப் சுற்று பற்றி எதிர்பார்க்க முடியாது. வெற்றி பெற்றாலும் மிகப்பெரிய அளவிலான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்குகிறது சென்னை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.