தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

14 May 2026, 9:11 pm
விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் ராங்கி - சிராக் ஜோடி

தாய்லாந்து ஓபன் பேட் மிண்டன் தொடரின் 38 ஆவது சீசன் பாங்காக்கில் உள்ள நிமிபுத்தர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பி.வி.சிந்து தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் இல்லாத டென்மார்க்கின் அமேலியை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். வெள்ளியன்று நடை பெறும் காலிறுதி சுற்றில் இந்தியா வின் பி.வி.சிந்து, தரவரிசையில் முத லிடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ஜப்பானின் யாமகுச்சியை எதிர்கொள்கிறார். ராங்கி - சிராக் ஜோடி அபாரம் ஆடவர் இரட்டையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, தரவரிசையில் இல்லாத மலேசியாவின் பிரையன் - முகமது ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராங்கி - சிராக் ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் ராங்கி - சிராக் ஜோடி ஜப்பான் நாட்டின் நோமுரா - யூச்சி ஜோடியை எதிர்கொள்கிறது.

இத்தாலி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் லூசியானோ

களிமண் தரையில் நடை பெறும் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் 83ஆவது சீசன் மே 5 அன்று தொடங்கியது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 18ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் லூசியானோ, தரவரிசையில் 31ஆவது இடத்தில் ஸ்பெயினின் ரபேல் ஜோர்ட ரை எதிர்கொண்டார். இருவரும் போராட்டம் குணமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் அளவிற்கு பரபரப்பாக நகர்ந்தது. இறுதியில் 7-6 (7-5), 5-7, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியானோ அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 6-0 குறிப்பாக, இந்த ஆட்டத்தின் 3ஆவது செட்டில் மாயாஜாலமிக்க அதிரடி நிகழ்ந்தது. முதல் 2 இரண்டு செட்டில் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றி இருந்தனர். இதனால் 3ஆவது செட் இருவரின் அதிரடியால் பரபரப்பாக நகரும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இத்தாலியின் லூசி யானோ என்ன நினைத்தாரோ தெரிய வில்லை. அசத்தலான அதிரடியால் ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 3ஆவது செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

சென்னை - லக்னோ இடம் : லக்னோ, உ.பி., / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

சென்னை அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்கள் உள்ளன. இந்த 3 லீக் ஆட்டங்களும், அந்த அணிக்கு மிக முக்கியமானது ஆகும். அதனால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.