தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தச்சமலை கிராம படகு சேவை திடீர் நிறுத்தம் மாணவர்களின் கல்விக்காக படகு சேவையை தொடர ஆட்சியரிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

3 Jul 2026, 8:41 pm
தச்சமலை கிராம படகு சேவை திடீர் நிறுத்தம் மாணவர்களின் கல்விக்காக படகு சேவையை தொடர ஆட்சியரிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்
<p><strong>தச்சமலை கிராம படகு சேவை திடீர் நிறுத்தம் மாணவர்களின் கல்விக்காக படகு சேவையை தொடர ஆட்சியரிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 3- கன்னியாகுமரி மாவட் டம் பேச்சிப்பாறை அணை யை கடந்து தினமும் பள்ளி செல்லும் மலைக்கிராம மாணவர்களின் கல்வி, படகு சேவை திடீரென நிறுத் தப்பட்டதால் பாதிக்கப் பட்டுள்ளது. உடனடியாக படகை இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ ஆர்.செல்லசுவாமி மாவட்ட ஆட்சியரிடம் கோ ரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் படகுகளை இயக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தச்ச மலை, பின்முட்டுதேரி, களப்பாறை ஆகிய மூன்று மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பேச்சிப் பாறை அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். அணையை படகு மூலம் கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க பேச்சிப்பாறை ஊராட்சி சார்பில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மாணவர்க ளுக்காக படகு ஒன்று வழங் கப்பட்டது. தொடக்கத்தில் சில நாட்கள் மட்டுமே அந்த படகு இயக்கப்பட்ட நிலை யில், கடந்த பல மாதங்க ளாக படகு சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.படகு இல்லாததால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட படகு சேவையை உடனடியாக மீண்டும் இயக்க ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.