வாழ்நாள் முழுவதும் செங்கொடிப் பற்று தள்ளாடும் வயதிலும் ‘டெக்ஸ்டூல்’ ரங்கசாமியின் தீரம்!
16 May 2026, 1:17 am

வாழ்நாள் முழுவதும் செங்கொடிப் பற்று தள்ளாடும் வயதிலும் ‘டெக்ஸ்டூல்’ ரங்கசாமியின் தீரம்!

காலங்களும், காட்சிகளும் மாறினாலும், ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டின் கொள்கை உறுதி கடைசி மூச்சு வரை மாறாது என்ப தற்கு சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் தோழர் டெக்ஸ்டூல் ரங்கசாமி.

கோவை வடக்கு பகுதி, கணபதிபுதூரைச் சேர்ந்த 84 வயது முதிர்ந்த தோழர் ரங்கசாமி, தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.

அவரை சந்திக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டக்குழு உறுப்பினர் மூர்த்தி, சித்தா தோட்டம் கிளைச் செயலாளர் அமுதா ஆகியோர் தோழர் ரங்கசாமியை காத்திருந்து சந் தித்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்.

உடல் தளர்ந்திருக்கலாம், ஆனால் உள்ளத்தில் இன்னும் அந்தச் செந்நிறக் கனல் குறையவே இல்லை.

இன்றும் அவரது பொழுது விடிவது ‘தீக்கதிர்’ நாளிதழோடு தான்.

தொழிலாளி வர்க்கத்தின் வலிகளையும், போராட்டங்களையும் சுமந்து வரும் அந்த ஏடுதான் அவருக்கு இப்போதும் உற்றத் தோழன்.

வெறும் பெயரளவில் கம்யூனிஸ்டாக இல்லாமல், களத்தில் நின்று களம் கண்டவர் ரங்கசாமி.

நீண்ட கால தொழிற்சங்க அனுபவம் கொண்ட இவர், தொழி லாளர்களின் உரிமைக்காகப் போராடி பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர்.

அடக்கு முறைகளும், சிறைக்கம்பிகளும் அவரது வர்க்கப் போராட்ட உணர்வை ஒருபோதும் மழுங்கடிக்கச் செய்ததில்லை.

“எல்லாம் கட்சிக்கு...” - ஒரு உன்னத தியாகம் இந்தச் சந்திப்பின் மிக உருக்கமான தருணம், அவரது சொத்துரிமை குறித்த முடிவு தான்.

கணபதிபுதூர் பகுதியில் இன்றும் செயல்பட்டு வரும் ‘மக்கள் மன்ற’ அலுவலகக் கட்டிடம், தோழர் ரங்கசாமி மற்றும் மறைந்த தோழர் ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோ ரின் பெயரிலேயே இருந்து வந்தது.

தன் அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்த நிலையிலும், ”நான் வாழ்ந்த இந்த இயக்கமே எனக்கு எல்லாம்” என்ற உயரிய நோக்கத்தில், அந்தச் சொத்தை முழுமை யாக கட்சியின் பெயருக்கே மாற்றிக் கொடுத்துள்ளார்.

தன்னிடம் எஞ்சியிருப்பதையும் சமூக மாற்றத்திற்காக இயங்கும் பேரியக்கத்திற்கு அர்ப்பணித்த அவரது செயல், அடுத்து வரும் தலைமுறைக்கான பாடம்.

சந்திப்பிற்குப் பின் பேசிய மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், இளம் வயதி லிருந்து இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சியிலும், சிஐடியு தொழிற்சங்கத்திலும் மாறாத பற்றோடு செயல்பட்டு வரும் தோழர் ரங்கசாமியை சந்தித்தது, ஒரு பெரும் மன நிறைவையும், போராட்ட உத்வேகத்தையும் அளிக்கிறது.

அவரது செங்கொடிப் பற்று வருங்கால தலைமுறைக்கு ஒரு பாடம்,” என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.