ஒன்றிய அரசை கண்டித்து ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து ஜவுளி உற்பத்தி நிறுத்தம்</strong></p>
<p>கோவை, பிப்.10- ஒன்றிய அரசை கண்டித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களில் இன்று முதல் சுமார் 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிலையங் கள் மூடப்படும் என ஜவுளி உற் பத்தியாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவி வரும் மிக மோசமான பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வுக்கு பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே கார ணம் என ஜவுளி உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, இன்று (புதன்கிழமை) முதல் உற்பத்தியாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற னர். கடந்த ஓராண்டு காலமாகவே நூல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதும், அவ்வப் போது நூல் விலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் ஜவுளித் தொழிலை முற்றிலுமாக சிதைத்து வருகின்றன. ஏற்கனவே வெளிநாடு கள் மற்றும் வெளிமாநிலங்களிலி ருந்து பெறப்பட்ட ஆர்டர்களை பழைய நூல் விலையின் அடிப்ப டையில் முடிக்க வேண்டிய கட்டா யத்தில் உற்பத்தியாளர்கள் உள்ள னர். ஆனால் தற்போதைய நூல் விலையோ உற்பத்தி செலவை விட பல மடங்கு அதிகமாக இருப்ப தால், ஒவ்வொரு ஆர்டரிலும் உற் பத்தியாளர்களுக்கு பெரும் நஷ் டமே மிஞ்சுகிறது. இந்த இக்கட் டான நிலையில் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியை நிறுத்துவதைத் தவிர வேறு வழி யில்லை என்று உற்பத்தியாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள் ளன. இப்போராட்டத்தின் காரண மாக இன்று முதல் சுமார் 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிலையங்கள் மூடப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் தொழில் முடக்கம் மட்டுமல்லாது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தக இழப் பையும், அரசுக்குச் சேர வேண்டிய வரி வருவாய் இழப்பையும் ஏற்ப டுத்தும். குறிப்பாக, திருப்பூர் மற் றும் கோவை மாவட்டங்களின் பொருளாதார முதுகெலும்பாக திக ழும் விசைத்தறி மற்றும் பின்னலா டைத் துறை சார்ந்த லட்சக்கணக் கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் அடித்தட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது. பஞ்சு பதுக்கலை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசு, கார்ப் பரேட் ஆலைகளுக்கு சாதகமாக நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிப்பதுமே இத் தொழில் வீழ்ச்சிக்கு முக்கியக் கார ணம் என தொழிற் சங்கங்கள் மிகக் கடுமையான கண்டனங் களை பதிவு செய்துள்ளன. ஜவுளித் துறையை பாதுகாக்க ஒன்றிய பாஜக அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண் டும் மற்றும் நூல் விலையை மாதந் தோறும் நிர்ணயம் செய்வதற்கு பதிலாக நீண்ட கால அடிப்படை யில் நிலைப்படுத்த வேண்டும் என் பதே ஜவுளி உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாகும். மேலும், சிறு, குறு உற்பத்தி யாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதி மற்றும் நூல் மானியம் போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் உற்பத்தியாளர் கள் வலியுறுத்தி வருகின்றனர். அர சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று தொடங்கும் இப்போராட் டம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும் என உற்பத்தியா ளர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ள னர். இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய துணி வரத்து பாதிக்கப்படும் என்பதால், இதன் தாக்கம் தேசிய அளவில் எதிரொ லிக்கும் எனத் தெரிந்ததுமே, கார்ப் பரேட் நிறுவனங்களின் லாபத்திற் காக சாதாரண உற்பத்தியாளர்க ளையும் தொழிலாளர்களையும் வஞ் சிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கைவிட வேண்டும் என போராட்டக் களத்தில் குரல்கள் வலுத்து வரு கின்றன. உடனடியாக உற்பத்தியா ளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணாவிட் டால், ‘தென்னிந்தியாவின் மான் செஸ்டர்’ என அழைக்கப்படும் கோவை பிராந்தியம் பெரும் பொரு ளாதார பின்னடைவை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.</p>
