தேர்தல் கெடுபிடியால் ஜவுளி வியாபாரம் பாதிப்பு
25 Mar 2026, 5:29 pm
<p><strong>தேர்தல் கெடுபிடியால் ஜவுளி வியாபாரம் பாதிப்பு</strong></p>
<p>- எம்.பிரபாகரன் - நாமக்கல் மார்ச் 25- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் குமாரபாளையத்தில் தேர் தல் நடத்தை விதிமுறைகள் காரண மாக ஜவுளிகளை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுவதால் கணிசமான அளவில் ஏற்றுமதி பாதிப் படைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யம் பள்ளிபாளையம் பகுதிகளில் ஏரா ளமான விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. ஜவுளி தொழில் உற் பத்திக்கு பேர் போன பகுதிகளாக விளங்கும் நிலையில் துண்டு, வேஷ்டி, சேலைகள், லுங்கி, கேரள சேலை வேஷ்டிகள், ஐயப்ப பக்தர்கள் அணியும் காவி, கருப்பு நிற வேட்டி கள் மருத்துவமனையில் பயன் படுத்தப்படும் பேண்டேஜ் துணிகள் ஆகிய ஜவுளிகள் சார்ந்த ஏராள மான உற்பத்தி பணிகள் இங்கு நடை பெற்று வருகிறது. விசைத்தறி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பணியாற்றி வருகின்ற னர். இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிக ளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில் தமிழக சட்ட மன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்த லுக்கு மிக குறுகிய நாட்களே உள்ள தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ஆங்காங்கே பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்ற னர். பள்ளிபாளையம் குமாரபாளை யம் பகுதியை பொறுத்த வரை குடி சைத் தொழில் போன்று வீடுகளில் இரண்டு முதல் நான்கு விசைத் தறிகள் அதிகம் வைத்து தொழில் மேற்கொள்வோர் உள்ளனர். அதே போல தறி பட்டறைகளை வாடகைக்கு எடுத்து பணியாற்றும் அடப்பு கூலி ஜவுளி உற்பத்தியாளர்களும் அதிக அளவு பள்ளிபாளையம் பகுதியில் உள்ளனர். பள்ளிபாளையம் குமாரபாளை யம் பகுதிகளில் உற்பத்தியாகும் ஜவுளிகள் அதிகளவு அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி கடைகளுக்கு நேரடியாக அனுப்புவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக ஜவுளிகளை அதிகளவு அனுப்புவதற்கு ஜவுளி உற் பத்தியாளர்கள் தயக்கம் காட்டுவ தால் ஜவுளி சந்தைக்கு வரும் ஜவுளி கள் ஏற்றுமதி சராசரியாக குறைந் துள்ளதாக ஜவுளிக்கடை தொழிலை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் நான்கு விசைத்தறிகளை சொந்தமாக வைத்து தொழில் நடத்தி வரும் கணேசன் என்ப வர் கூறும் பொழுது, எப்போதுமே வார இறுதி நாட்களில் உற்பத்தி செய்யப் படும் ஜவுளிகளை, முறைப்படுத்தி பண்டல்களாக கட்டி உரிய ரசீதுக ளுடன் அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். என்னைப் போலவே பல்வேறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்க ளும், ஜவுளிகளை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்றுமதிக்காக சரக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்து வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லை என பணம் மற்றும் கொண்டு செல்லும் பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்ற னர். நாங்கள் முறையான ரசீது, ஜிஎஸ்டி பில் ஆகியவற்றுடன் இணைத்து தொழிலை மேற்கொண்டு வந்தாலும், வெளியிடங்களுக்கு ஜவுளிகளை கொண்டு சென்றாலும் ஒருவித தயக்கத்துடனே பொருட் களைக் கொண்டு செல்ல வேண்டியுள் ளது. ஏனெனில் ஜவுளிகளை வாடிக்கை யாளர்களுக்கு வழங்கிவிட்டு அவர் களிடம் ஜவுளிக்கான தொகையைப் பெறும் பொழுது தயங்கியபடியே தொகையை பெற வேண்டி உள்ளது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலே இருந் தால் இங்கே பறக்கும் படை அதி காரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து விடுவார்களோ என்ற அச்சத்திலே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகைகளை நாங்கள் கேட்டு பெற்றுக்கொண்டு, மீதமுள்ள வற்றை வங்கிக் கணக்கில் போடு மாறு கூறிவிடுகிறோம். அதே போல ஜவுளிகளை விற் பனைக்காக கொண்டு செல்லும் பொழுதும் முன்பெல்லாம் ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரையிலான சரக்குகளை விற்பனைக்கு கொண்டு செல்வோம் . ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் எவ்வளவு மிக குறை வாக ஜவுளிகளை கொண்டு செல்ல முடியுமோ அதை கொடுத்து வரு கிறோம். தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை முறையான ஆவணங்கள் ரசீது கள் இருந்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படாது என தெரிவித்து இருந்தாலும், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக தேவையற்ற மன உளைச்சலையும், பணம் மற்றும் பொருள் இழப்பை தவிர்க்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கை களை ஜவுளி உற்பத்தியாளர்களாகிய நாங்கள் மேற்கொள்கிறோம் . அதேபோல எங்களிடம் ஜவுளி களை வாங்கும் வியாபாரிகளும் அதிக அளவு பொருட்கள் இருப்பு வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் வரலாம் என்பதால் அவர்களும் மிகக் குறைந்த அளவிலேயே ஜவுளிகளை பெற்றுக் கொள்கிறார்கள். அதிலும் கட்சி சார்புடைய வேஷ்டி மற்றும் துண்டுகளை எடுத்துச் செல் லும் பொழுது இன்னும் அதீத பயத் துடனே கொண்டு செல்கின்ற நிலை உள்ளது என்றார்.</p>
