தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டெக்ஸ்ப்ரோசில் புதிய நிர்வாகிகள் தேர்வு

6 Oct 2026, 2:06 am
டெக்ஸ்ப்ரோசில் புதிய நிர்வாகிகள் தேர்வு

டெக்ஸ்ப்ரோசில் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, அக்.5-இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் புதிய தலைவராக ரவி சாம், துணைத் தலைவராக தர்மேந்திர கோயல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (டெக்ஸ்ப்ரோசில்) 2026–27 மற்றும் 2027–28-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைப்பின் புதிய தலைவராக கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ரவி சாமும், துணைத் தலைவராக தர்மேந்திர கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரவி சாம், அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். வணிகவியல் பட்டதாரியான இவர், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஜவுளி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றவர் ஆவார். ஜவுளித்துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இவர், சைமா (SIMA) மற்றும் சி.ஐ.ஐ (CII) தமிழ்நாடு ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். அத்துடன் சிறுதுளி அமைப்பின் நிறுவன அறங்காவலராகவும், பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் தலைவராகவும் இருந்து சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் பங்காற்றி வருகிறார்.

துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மேந்திர கோயல், த்ரீ-ஸ்டார் ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீதர் காட்சின் பிரைவேட் லிமிடெட் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள ஸ்ரீதர் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார். பட்டயக் கணக்காளரான (CA) இவர், கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பருத்தி, நூல் ஏற்றுமதி மற்றும் நூற்பாலை துறையில் சர்வதேச வர்த்தக நிபுணத்துவம் பெற்று களப்பணியாற்றி வருகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.