தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிரியர்களைச் சிறுமைப்படுத்த நடத்தப்படுவதல்ல தகுதித் தேர்வு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்!

4 Jul 2026, 8:44 pm
ஆசிரியர்களைச் சிறுமைப்படுத்த நடத்தப்படுவதல்ல தகுதித் தேர்வு  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்!

ஆசிரியர்களைச் சிறுமைப்படுத்த நடத்தப்படுவதல்ல தகுதித் தேர்வு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்!

சென்னை, ஜூலை 4- “ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்களைச் சிறுமைப்படுத்துவ தற்காக நடத்தப்படுவதல்ல; தேர்வு நடத்தும் அதிகாரிகளும் ஊடகங்களும் இதில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் ஒன்று (TET: Paper 1) அண்மையில் நடந்து முடிந்த சூழலில், தேர்வு மையங்க ளின் செயல்பாடுகள் குறித்து விமர்ச னங்களை முன்வைத்துள்ளார்.

மனிதாபிமானமற்ற வணிகச் சந்தையாகும் கல்வி

தேர்வு மையத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்த ஆசிரியரை உள்ளே அனுமதிக்க மறுத்து, அதிகாரி ஒருவர் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி யில் காரில் ஏறும் காணொலி ஊடகங்க ளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ‘நீட்’ தேர்விலும் இதே போன்ற அவ லங்கள் அரங்கேறின. கல்வி இன்று வணிகச் சந்தையின் பிடிக்குள் சிக்கி யுள்ளதால், அங்கு மனிதாபிமானத்தை எதிர்பார்க்க இயலவில்லை. யாரிடமும் கருணையை எதிர் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து, தேர்வு எழுதச் செல்லும் ஆசிரியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் உரிய நேரத்திற்குள் மையங்களை அடைய வேண்டும். அதேநேரம், ஆசிரியர்க ளின் கெஞ்சலும் கதறலும் காணொ லியாக வெளியாவது ஆசிரியர் தொழி லையே சிறுமைப்படுத்த உதவும் என்பதால், பொறுப்புள்ள ஊடகங்கள் அத்தகைய காணொலிகளை உடனே அகற்ற வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் சூழ்ச்சி

அரசமைப்புச் சட்டத்தின் 86-ஆவது திருத்தத்தில் (கூறு 21A), குழந்தைக ளுக்குக் கல்வி உரிமை வழங்குவ தாகக் கூறிவிட்டு, கூறு 51A(k) மூலம் அதனைப் பெற்றோரின் கடமை யாக்கிய சூழ்ச்சி குறித்து எந்த ஊடக மும் விவாதிக்கவில்லை. 2009-ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் தகுதி யான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது. கல்வியியலில் பெற்ற பட்டயமும் பட்டமுமே ஆசிரியருக்கான தகுதி. ஆனால், அதற்கு மாறாக நினை வாற்றலை மட்டுமே சோதிக்கும் ஆசிரி யர் தகுதித் தேர்வை அரசு கட்டாய மாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடி களால் கல்வித் தரம் மேம்படாது என்ற புரிதல் இல்லாமல், நீதிமன்றங்களைக் காரணம் காட்டி அரசு இந்தத் தேர்வை நடத்துகிறது. எனவே, பல சவால் களை வென்ற ஆசிரியர் பெருமக்கள், இத்தகைய நெருக்கடிகளையும் அச்ச மின்றி, மன வலிமையுடன் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.