முந்தய பக்கம்

45 மையங்களில் டெட் தேர்வு

16 Nov 2025, 3:30 pm
45 மையங்களில் டெட் தேர்வு
<p><strong>45 மையங்களில் டெட் தேர்வு</strong></p> <p>கோவை, நவ.16- கோவை மாவட்டத்தில் 45 மையங்களில் இரண்டாம் &nbsp;தாள் ஆசிரியர் தகுதி தேர்வு ஞாயிறன்று நடைபெற் றது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்ப டும் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு நாட்கள் நடைபெற் றது. கோவை மாவட்டத்தில் சனியன்று 15 தேர்வு மையங் களில் நடைபெற்ற தாள்-1 தேர்வை 3155 பேர் எழுதினர். &nbsp;தொடர்ந்து தாள்-2 தேர்வு ஞாயிறன்று 45 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வு எழுத 12,370 பேர் விண்ணப் பித்திருந்தனர். மேலும், இந்த தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு &nbsp;பணியில் ஈடுபட்டனர். தேர்வினை முன்னிட்டு தேர்வு &nbsp;மையங்களுக்கான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட் டுள்ளது. தேர்வு எழுத வரும் ஆசிரியர்கள் சோதனைக்கு &nbsp;பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram