தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் பயங்கர சம்பவம் கார் குண்டு வெடித்து 10 பேர் உடல் சிதறி பலி 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

10 Nov 2025, 2:46 pm
தில்லியில் பயங்கர சம்பவம் கார் குண்டு வெடித்து  10 பேர் உடல் சிதறி பலி 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
<p><strong>தில்லியில் பயங்கர சம்பவம்கார் குண்டு வெடித்து&nbsp;10 பேர் உடல் சிதறி பலி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்</strong></p> <p>புதுதில்லி, நவ.10- நாட்டின் உச்சபட்ச பாது காப்பு வளையத்தில் இருக் கும் தில்லி செங்கோட்டை பகுதியில் திங்களன்று மாலை கார்குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறி பலியாகி &nbsp;இருப்பதாக முதற்கட்டத் தக வல்கள் தெரிவித்தன. மேலும், 20-க்கும் அதிகமா னோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாரா யணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். &nbsp;காரில் குண்டு வெடித் &nbsp;ததா? இல்லை, வேறு எது வும் பொருள் வெடித்ததா? என்பது தொடர்பாக திங்க ளன்று இரவு 9 மணி வரை &nbsp;உறுதியான தகவல் எதுவும் &nbsp;வெளியாவில்லை. எனினும், &nbsp;குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்த தால், பல மீட்டர் தொலை வில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடி கள் உடைந்தன. &nbsp;தில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேசனின் 1-ஆவது நுழைவு வாயில் அருகில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் &ldquo;6 கார் &nbsp;கள், இரண்டு இ-ரிக்&zwnj;ஷாக்கள் &nbsp;மற்றும் ஒரு ஆட்டோ ரிக்&zwnj;ஷா தீயில் கருகி விட்டன&rdquo; என்று &nbsp;தீயணைப்புத் துறை அதி காரி ஒருவர் தெரிவித்தார். தில்லி தீயணைப்புத் துறையினருக்கு மாலை 6:55 மணியளவில் வெடிப்பு குறித்து அழைப்பு வந்துள் &nbsp;ளது. அதன் பிறகு 7 தீய ணைப்பு வாகனங்கள் மற்றும் 15 &nbsp;ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந் தன. அவர்கள் போராடி, இரவு &nbsp;7.29 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தில்லியில் உச்சபட்ச பாதுகாப்பு பகுதியான செங்கோட்டை பகுதியில் &nbsp;நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி யில் உயர் பாதுகாப்பு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உஷார் &nbsp;நிலைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. குண்டுவெடித்த இடத் தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), தேசிய பாது காப்புப் படை (NSG) குழு வினர் விசாரணை நடத்தினர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.