மின்கசிவால் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ
3 Jan 2026, 2:20 pm
<p><strong>மின்கசிவால் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ</strong></p>
<p>நாமக்கல், ஜன.3- ராசிபுரம் அருகே டிரான்ஸ்பார்மரில் மின்கசிவால் மலைப் பகுதியில் பயங்கர காட்டு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீய ணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோயில் அருகே நாமக்கல் வழியாக சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள அத்தனூர் மலையில் வெள்ளியன்று திடீரென ஏற்பட்ட காட்டு தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை நோக்கி பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப் போது மலையின் மேல் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதை கண்ட தீயணைப்பு துறையினர் முதற் கட்டமாக டிரான்ஸ்பார்மர்க்கு வரும் மின்சாரத்தை துண்டித்த னர். பின்னர் தீயை அனணக்கும் பணியில் ஈடுபட்டனர். காற் றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், தீ மலையின் பல் வேறு பகுதிகளில் பரவி தக தகவென பற்றி எரிய தொடங் கியதால், தீயணைப்பு துறையினர் உயிரை பணயம் வைத்து செடிக்கொடிகளை வைத்து நெருப்பின் மீது அடித்து அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு களும், அருகில் பெட்ரோல் பங்கும் உள்ளதால் தீயை பரவா மல் தடுக்க தீயணைப்பு வாகனத்தில் உள்ள நீரை மோட்டார் மூலம் பீச்சி அடிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 5 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் தீ அதி வேகமாக மலையின் மீது பரவியதால் தீய ணைப்புத் துறையினர் கடும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திடிரென டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்கசிவு ஏற் பட்டு மலைப்பகுதியில் தீ பரவியதால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
