உலர் பழங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து
1 Mar 2026, 5:56 pm
<p><strong>உலர் பழங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து</strong></p>
<p>அம்பத்தூர், மார்ச் 1- திருவேற்காட்டில் உள்ள உலர் பழங்கள் குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தனி யாருக்கு சொந்தமான குடோனில் பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உலர் பழங்கள் சேமித்துவைத்து பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழு வதும் உள்ள கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குடோனில் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரு கின்றனர். இந்நிலையில் ஞாயிறு அதிகாலை குடோனில் இருந்து புகை வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந் தனர். இதுகுறித்து தகவல் அறிந்து பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஆவடி ஆகிய பகுதிகளில் இருந்து 7 தீய ணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் குடோனில் இருந்த ஒரு கோடி மதிப்பி லான விலை உயர்ந்த உலர் பழங்கள், கொட்டைகள் ஆகி யவை எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவேற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
