கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
25 Nov 2025, 3:29 pm

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

உடுமலை, நவ. 25 - உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே வணிக வளா கத்தில் இயங்கி வந்த துணிக்கடையில் நள்ளிரவில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புடைய பொருட் கள் சேதமடைந்தது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிர வணிக வளா கத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த துணிக்கடை யில், திங்களன்று நள்ளிரவு எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உடுமலை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த னர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் துணிக்கடை யில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை யினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரண மாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மத்திய பேருந்து நிலையம் எதிர்ப்புறம் பரபரப்பான பகுதி யில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத் து சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தவறவிட்ட பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு

உதகை, நவ.25- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொலைந்து போன சுற்றுலாப் பயணியின் 1¼ பவுன் நகையும், வெளிநாட்டு சுற்று லாப் பயணியின் செல்போனும் மீட்கப்பட்டு உரிமையாளர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணி கள் அதிகளவு வருகின்றனர். ஒரு ஆண்டிற்கு 30 லட்சத்திற் கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்ற னர். இந்நிலையில், விடுமுறை தினமான ஞாயிறன்று சுற்று லாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந் தது. இதில், கேரளம் மாநிலத்தை சேர்ந்த அட்சத் என்பவர் குடும்பத்துடன் தாவரவியல் பூங்காவுக்கு வந்து சுற்றி பார்த் தார். அப்போது அவர் அணிந்திருந்த 1¼ பவுன் தங்க நகை யை தொலைத்துவிட்டார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்த போலீசாரிடம் விசாரித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, கேரளம் மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பின்சா என்பவர் தாவரவியல் பூங்கா வில் கேட்பாரற்று கிடந்த நகையை எடுத்து உதகை மத்திய காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் பின்சாவை வரவழைத்து பழைய புகைப்படங் களை சோதனை செய்து அவருடைய நகை தான் என்பதை உறுதி செய்து அவரிடம் நகையை ஒப்படைத்தனர். இதே போல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை மீட்ட போலீசார், அதையும் வெளி நாட்டு பயணியை வரவழைத்து ஒப்படைத்தனர்.

டாப்சிலிப் அரசு உணவகத்தை மூடாதீர்

கோவை, நவ.25– டாப்சிலிப் சுற்றுலாத் தலத்தில் இயங்கி வரும் அரசு உணவகத்தை திடீரென புதுப் பிக்க வேண்டும் என்ற பெயரில் காலி செய்ய வலியுறுத்துவதாகவும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே அதிக வருமானம் கிடைப்பதால் இந்த இரு மாதங்களுக்கு உண வகத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டு மெனவும் பழங்குடியின இளைஞர் மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சி லிப் பகுதியை சேர்ந்த பழங்குடியின இளை ஞர் பிரசாந்த், கடந்த 2024 மார்ச் மாதம் முதல் அரசு ஒதுக்கீட்டில் இயங்கி வரும் உணவ கத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகத் தில் பழங்குடியின இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து தங்கள் குடும் பத்தை காப்பாற்றி வருகின்றனர். ஆனால், தற்போது வனத்துறையினர் திடீ ரென உணவகத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி காலி செய்யும்படி நிர்பந்திப்ப தாக பிரசாந்த் குற்றம் சாட்டுகிறார். “டிசம் பர், ஜனவரி மாதங்களில்தான் சுற்றுலாப் பய ணிகள் அதிகளவில் வருவார்கள். இந்த இரு மாதங்கள்தான் எங்களுக்கு வருமானம் வரும் காலம். புதுப்பிக்கும் பணியை பிப்ரவரி மாதத்துக்கு பிறகு செய்தால் போதுமானது. அதுவரை உணவகத்தை நடத்த கால அவ காசம் தர வேண்டும்” என கோவை மாவட்ட ஆட்சியரிடமும், பழங்குடியினர் நல அலுவ லகத்திடமும் மனு திங்களன்று அளித்துள் ளார். ஜீப் இயக்கவும் தடை? மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள் ளூர் மலைவாழ் மக்களுக்கும் பயன்படுத்த சொந்த செலவில் ஜீப் வாகனம் வாங்கியுள் ளதாகவும், அதற்கு உரிய அனுமதி தராமல் வனத்துறையினர் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்கின்றனர். “தற்போது வனத்துறையின் இரண்டு ஜீப்புகள்தான் இயங்குகின்றன. எனது ஜீப்பும் இயங்கினால் பழங்குடியின மக்களுக்கு வேலை கிடைக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதியாக இருக்கும்” என வும் அவர் வலியுறுத்தினார்.

பூத்துக்குலுங்கும் எவர்லாஸ்ட் மலர்களை கண்டு ரசிப்பு

உதகை, நவ.25- நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகு திகளிலும் பூத்து குலுங்கும் எவர்லாஸ்ட் மலர்களை கண்டு சுற்றுலாப் பயணி கள் ரசித்ததோடு மட்டுமின்றி, விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்த அவற் றை வாங்கிச் சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மட்டுமின்றி, சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதி களிலும் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் காணப்படும். இது சுற்றுலாப் பய ணிகளை மட்டுமின்றி, உள்ளூர் மக் களையும் கவர்ந்து வருகிறது. குறிப் பாக, குறிஞ்சி மலர்கள், ஜெகரண்டா, சேவல் கொண்டை மலர்கள், டேலியா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர் கள் அவ்வப்போது சீசனுக்கு ஏற்றார் போல் பூத்து காணப்படும். பெரும் பாலும், இந்த மலர்கள் சாலை யோரங்களில் பூப்பதால், அப்பகுதியே மிகவும் அழகாக காட்சியளிக்கும். இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்று லாப் பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த மலர்களை போன்றே அவ்வப்போது நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங் கள், சாலையோரங்களில் மஞ்சள் நிறத் தில் எவர்லாஸ்ட் மலர்கள் பூப்பது வழக் கம். இந்த மலர்கள் பல நாட்கள் வாடா மல் இருக்கும். இதனால், இதற்கு ‘காகித பூக்கள்’ என்ற பெயரும் உண்டு. இந்த எவர்லாஸ்ட் மலர்களை பறித்து வந்து பெரும்பாலான பெண்கள் சுற்று லாத் தலங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை சுற்று லாப் பயணிகளும் ஆர்வமுடன் வாங் கிச் செல்கின்றனர். இந்நிலையில், உதகை - மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் கைகாட்டி, காந்திப்பேட்டை, 6 ஆவது மைல், பாலகொலா, காத்தாடிமட்டம் போன்ற பகுதிகளில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இதனை சுற்று லாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செவ்துடன் அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். இந்த மலர்களை பறித்து வந்து உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பல பெண்கள் விற்பனை செய்கின்றனர். ஒரு மலர் கொத்து ரூ.20 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் வாடாமல் காகிதம் போல் காட்சி அளிப்பதால் இதனை பலரும் வாங்கி செல்கின்றனர்.

சுடுகாட்டிற்கு பட்டா கேட்டு மனு

ஈரோடு, நவ.25- மொடக்குறிச்சி வட்டத்தில் சுடுகாடாகப் பயன்படுத்தி வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்க ளன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மொடக்குறிச்சி வட்டம், ஓலப்பாளையம், திருவள்ளுவர் நக ரைச் சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், மேற்கண்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட பட்டிய லின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் ஊரில் இறந்தவர்கள் உடலை மொடக்குறிச்சி சந்தை பேட்டை அருகே உள்ள சின்னதோப்பு என்ற இடத்தில் புதைத்து வருகி றோம். சுடுகாடாக பயன்படுத்தி வந்த அவ்விடம் தற்போது நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. பல ஆண்டாக சுடு காடாக பயன்படுத்தும் இடத்தை, எங்கள் சமூக மக்க ளுக்கு சுடுகாடாக பட்டா செய்து வழங்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையை பாதுகாப்பதன் மூலமே பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படும்

ஈரோடு, நவ. 25- கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கும் வலது சாரி ஆட்சியின் கீழ் கூட்டுறவுத் துறையின் நிலை குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தீக்கதிர் செய்தியாளரிடம் அவர் கூறுகையில், கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு துறைகளின் கீழ் (கைத்தறி, மீன் வளம், பால்வளம், வீட்டுவசதி, சமூக நலம்) பரந்து விரிந்துள்ள நிலையில், இவற்றில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஒரே சீரான ஊதிய விகிதம் மற்றும் அகவிலைப்படி இல்லை. இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதா ரர்கள் பாதிக்கப்படுகின்றனர். மிகக் குறைந்த கருணை ஓய்வூதியம் (ரூ.1000) கூட மகளிர் உரிமைத் தொகை போன்ற சமூக நலத் திட்டங்களை பெறுவதை தடுக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அனைத்து சங்க ஊழியர்களுக்கும் கருணை ஓய்வூதி யம் வழங்க அரசு ஆணை வெளியிட்டா லும், உயிருடன் உள்ள பழைய ஓய்வூதியர்க ளுக்கு இது மறுக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு சங்கத்திலும் ஓய்வூதியத்திற்காக 10% நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு உத்தர விட்டது வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளதையும், 63,000 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கி மாநிலங்க ளின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களை தன்வசப்படுத்த முயல்வதையும் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்து டன், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மீன்வ ளம், பால்வளம், வேளாண்மை ஆகிய துறை களில் புதிய சங்கங்களை உருவாக்கும் திட் டம் மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களை நலிவடையச் செய்யும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்தார். மேலும், நாடு முழுவதும் பொது விநியோ கத் திட்டத்தை தனியாருக்குத் தாரைவார்க் கும் விதமாக நியாயவிலைக் கடைகளை ஏஜென்சிகளாக மாற்றும் ஒன்றிய அரசின் நட வடிக்கையையும் அவர் விமர்சித்தார். கூட்டுறவுத் துறை மாநில அரசின் கட்டுப் பாட்டின் கீழ் நீடித்தால் மட்டுமே, பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படு வதை உறுதிப்படுத்த முடியும் என்று ஏ. கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டமாக தெரிவித் தார்.