தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்ட பதற்றம்

27 Jan 2026, 3:14 pm
அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்ட பதற்றம்
<p><strong>அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்ட பதற்றம்</strong></p> <p>டெஹ்ரான் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா குண்டுவீசி பெரும் போரை உருவாக்கலாம் என்ற நிலை உருவாகி யுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கா தனது படைகளை தயார்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளின் தடைகளால் ஈரானில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக மக்க ளின் மீது அந்நாட்டின் மத அடிப்படைவாத அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருவதுடன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கைது செய்துள்ளது. &nbsp;மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானை &nbsp;தாக்குவோம் என அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்தன. மேலும் அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை ஈரானை நோக்கி நகர்த்தியது. தற்போது ஆபிரகாம் லிங்கன் என்ற பெயர் கொண்ட அமெரிக்காவின் &nbsp;விமானம் தாங்கி போர்க்கப்பல் ஈரானை நெருங்கியுள்ளது. &nbsp;ஐக்கிய அரபு அமீரகம், ஹிஸ்புல்லா இந்நிலையில், ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தனது நிலம், வான்வெளி அல்லது கடல் பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதேபோல ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம், ஈரான் தாக்கப்பட்டால் தங்கள் ராணு வம் நடுநிலை வகிக்காது. ஈரான் மற்றும் அதன் &nbsp;தலைமைக்குத் தங்கள் முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார். தற்போது எப்போது வேண்டுமானாலும் &nbsp;மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் உருவாக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. &nbsp;இத்தகைய சூழலில், ஈரான் உடனான நிலைமை தற்போது &ldquo;மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாக&rdquo; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரி வித்துள்ளார். மேலும் அவர்கள் உண்மையா கவே ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார்கள் என &nbsp;தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கினால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பி டத்தக்கது. &nbsp;ஈரான் எச்சரிக்கை அமெரிக்காவின் செயல்பாடுகள் ஈரான் மட்டுமல்லாது இறையாண்மை கொண்ட நாடு களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையிலா னது என அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் எச்ச ரிக்கை விடுத்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் அமெரிக்காவின் செயலுக்கு &nbsp;எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல டிரம்ப் &nbsp;தான் ஈரானுக்குள் கலவரத்தைத் தூண்டி விட்டு வருகிறார், அரசியல் அழுத்தம் என்ற போர்வையில் வன்முறையை ஊக்குவிக்கிறார். இத்தகைய &ldquo;சட்டவிரோதக் கொள்கைகளால்&rdquo; ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் சொத்து அழிவு களுக்கு அமெரிக்காவே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மதத்தலைவரான அயதுல்லா செய்யது அலி காமேனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் வேலாயதி &nbsp;டிரம்ப் &nbsp;&ldquo;அதிகாரம், பணம் மற்றும் பொருள் ஆதாயத்தின் மீது பேராசை கொண்டவர்&rdquo;, அதே சமயம் &ldquo;தோல்விக்கு பயப்படும் நபர் &ldquo; என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.