முந்தய பக்கம்

தில்லியில் மீண்டும் பதற்றம்

13 Nov 2025, 3:30 pm
தில்லியில்     மீண்டும்      பதற்றம்
<p><strong>தில்லியில் &nbsp; &nbsp; மீண்டும் &nbsp; &nbsp; &nbsp;பதற்றம்</strong></p> <p>நாட்டின் தலைநகர் தில்லியில், திங்களன்று மாலை செங் கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாய மடைந்தனர். &nbsp;இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து &nbsp;வருகிறது. ஆனால் குண்டுவெடிப்புக்கு என்ன காரணம்? பயங்கரவாதத் தாக்கு தலா? எதனால் கார் வெடித்தது? இது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் ஒன்றிய மோடி அரசு தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்தது பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியது. இந்நிலையில், தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு பதற்றத்துக்கு இடையே வியாழக்கிழமை அன்று காலை காவல்துறை அவசர எண்ணுக்கு அழைத்த பெண் ஒருவர்,&rdquo;தில்லி என்சி ஆர் பகுதியான குர்கான் அருகே &nbsp;மஹி பால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட் டலுக்கு அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டது&rdquo; எனக் கூறினார். தகவலையடுத்து காவல்துறையின ரும், தீயணைப்புப் படையினரும் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து &nbsp;சோதனை மேற்கொண்டனர். இருப்பி னும், அங்கு எந்த சந்தேகத்திற்கிடமான சம்பவமும் நடக்கவில்லை &nbsp; என்று தெரியவந்தது. உள்ளூர்வாசிகளிடம் விசாரித்தபோது தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்ற போது பின்புற டயர் வெடித்து பலத்த &nbsp;சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது. பின்னர் அதனைச் சுற்றியுள்ள பகுதி களை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் &nbsp;இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் பெண்ணின் குற்றச்சாட்டால் தில்லியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram