தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

18 Nov 2026, 8:45 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

‘நவ.21, 22, 29’ தென்காசியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி, நவ. 18-தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் வகையில், நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், முகவரி மாற்றம் செய்யவும் படிவம் 8 ஆகியவற்றைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்தச் சிறப்பு முகாம்களை பொதுமக்கள், வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விவரங்களைச் சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா கேட்டுக்கொண்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட லாட்டரிகளுடன் ஒருவர் கைது

தென்காசி,நவ.18-தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்றதர்மர் (45). இவர் ,அரசால் தடை செய்யப்பட்ட 158 கேரளா லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தார். சாம்பவர்வடகரை காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுஇவரைக் கைது செய்தனர்.

சாம்பவர்வடகரை மட்டுமின்றி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள முக்கிய நுழைவு வாயிலான புளியரை சோதனைச் சாவடியில்தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்படுவதைத் தடுக்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலினுக்குபொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி,நவ.18-தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஒன்றிய , மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வட்டாரங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கீழ்க்கண்ட இறுதி நாளுக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: பாசி மற்றும் உளுந்து: 30.11.2026 மக்காச்சோளம் மற்றும் பருத்தி: 15.12.2026 சோளம் மற்றும் நிலக்கடலை: 16.12.2026 கம்பு, எள் மற்றும் சூரியகாந்தி: 30.12.2026 நெல் III (நவரை): 01.02.2027. விவசாயிகள் தங்களது அருகிலுள்ள பொதுசேவை மையங்கள் (CSC), தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும், அல்லது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட இணையதளம் வழியாக நேரடியாகவும் பிரிமியத் தொகையைச் செலுத்திப் பதிவு செய்யலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வறட்சி, வெள்ளம், புயல், ஆலங்கட்டி மழை உள்ளிட்ட தவிர்க்க முடியாத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்குக் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படும். எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே தங்களது சாகுபடி விவரங்களைப் பயிர்வாரியாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் பதிவு செய்து பயிர்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.