தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

28 Oct 2026, 8:29 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

தென்காசி ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு

தென்காசி, அக்.28-தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பெயரில் சமூக வலைதளமான முகநூலில் ( Facebook) “Ranjeet Singh” என்ற பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்தக் கணக்கைப் பின்தொடரவோ, அதில் பதிவிடப்படும் பதிவுகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யக் கோரிக்கை

தென்காசி, அக். 28 –தென்காசி மாவட்டத்தில் ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி செயலராகப் பணியாற்றி வருபவர் உதயராஜ்.இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வருகிறார்.

ஊராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களின் பணிக்காலம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்குச் சென்றடைந்த விதம், பட்டியலின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்பட்டுள்ளனவா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரி சாத்தான், சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர், பருவக்குடி வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

பைக்கில் ஆடை சிக்கி கீழே விழுந்த பெண் பலி

தூத்துக்குடி,அக்.28- தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி. காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் மனைவி விசித்ரா (26). இவர் நேற்று கொடியங்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தனது தந்தை முருகனின் இருசக்கர வாகனத்தில் அவர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அக்கநாயக்கன்பட்டி கிராமம் அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது, விசித்ரா கழுத்தில் அணிந்திருந்தசால்வை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதன் காரணமாக அவர்நிலைதடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்ததில், அவரது பின் தலையில் பலத்த அடிபட்டது. இதில்படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் வலுக்கட்டாயமாகக் கைது! போலீஸ் பாதுகாப்புடன் மதுவிற்பனை துவக்கம்

தூத்துக்குடி,அக்.28-தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். காவல்துறையினரின் பாதுகாப்புடன் மதுபான விற்பனை தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி வெள்ளைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் 10060) மூடக்கோரி, வெள்ளைப்பட்டி, துப்பாஸ்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி,மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் புதனன்று இரண்டாவது நாளாகநடைபெற்ற போராட்டத்தின்போது பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

பின்னர் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு. விற்பனை துவங்கப்பட்டது. மதுபான கடைக்கு அருகே போலீசார் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.