முந்தய பக்கம்

தென்காசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 Jun 2026, 8:57 pm
தென்காசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>தென்காசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, மே 2- அனைத்து விவசாயிக ளுக்கும் முழுமையாக விவ சாயக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரியும், மத்திய அரசின் உர விலையைக் குறைக்க வலியுறுத்தியும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டச் செயலாளர் அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜகோபால், முத்து ராஜன், சங்கரன், அறிஞர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை யில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் கணபதி, தமிழ் நாடு நீர்வள பாதுகாப்போர் நலச்சங்க நிர்வாகி டேனி யல் அருள்சிங், விவசாய சங்க மாவட்ட துணைச் செய லாளர் வேலுமயில், மாவட்ட துணைத் தலைவர் ராம கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் மீராகனி, செங்கோட்டை விவசாய சங்கத் தலைவர் சின்னச் சாமி உட்பட 50-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram