தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நில அளவை அலுவலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

12 Aug 2026, 9:46 pm
நில அளவை அலுவலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஆக.12 -தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் அரசங்குளம் கிராமத்தில் பணியில் இருந்த நில அளவை அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட அலுவலர் மீதே வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்தும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில்தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன்தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கயத்தாறு வட்டம் அரசங்குளம் கிராமத்தில் புஞ்சை சர்வே எண் தொடர்பாக சண்முகம் என்பவர் அளித்த மனுவின்அடிப்படையில் குறுவட்ட நில அளவர் மகேஷ் நில அளவீடு செய்ய சென்றுள்ளார். அப்போது எதிர்மனுதாரர் லட்சுமணன் என்பவர் உருட்டுக்கட்டையால் நில அளவர் மகேஷை தாக்கியதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் தாக்குதலில்ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நில அளவர் மகேஷ் கோவில்பட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நில அளவர் மீதேவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, நில அளவை அலுவலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநில அவசர செயற்குழு கூட்டமுடிவின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நில அளவர் மகேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைஉடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், தாக்குதலில் ஈடுபட்ட லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதுஉரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். களப்பணியில் ஈடுபடும் நில அளவை அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கணபதிராமன் கோரிக்கை விளக்கஉரையாற்றினார். சங்கரன்கோவில், கோட்டத் தலைவர் கனகராஜ், தென்காசி கோட்டத் தலைவர் புவனேந்திரன், தலைமை நில அளவர் நாகராஜன் மற்றும் டி.என்.எஸ்.ஓ.யூ, நிர்வாகிகள் நூர்ஜஹான், சுபாஷ், பிரபாகரன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஜாக்டோ ஜியோ முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் துரைசிங் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கற்பகம் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.