திருநெல்வேலி விரைவு செய்திகள்
28 May 2026, 11:43 pm

6 நகராட்சிகளில் பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க உதவி மையம்

தென்காசி ,மே 28- தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சுரண்டை, கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில், புளி யங்குடி ஆகிய 6 நகராட்சிகளில் பொதுமக்கள் நகராட்சிக ளின் சேவைகள் குறித்த தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க உதவிமையம் அமைக்கப் பட்டுள்ளது. தென்காசி நகராட்சிக்கு 8438474656 என்ற எண்ணி லும், சுரண்டை நகராட்சிக்கு 8610008496 என்ற எண்ணிலும், கடையநல்லூர் நகராட்சிக்கு 8438214656 என்ற எண்ணி லும், செங்கோட்டை நகராட்சிக்கு 8610718016 என்ற எண்ணி லும், சங்கரன்கோவில் நகராட்சிக்கு 8807313435 என்ற எண்ணிலும், புளியங்குடி நகராட்சிக்கு 8778967388 என்ற எண்ணிலும் பொது மக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைபாடுகளை புகைப்படமாகவோ, குறுஞ்செய்தியா கவோ அல்லது கைபேசி அழைப்பின் வாயிலாகவோ 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் கூட்டுத் தொழுகை

நாகர்கோவில்.மே.28- பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவிலில் இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் ஒன்றிணைந்து கூட்டு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் இளங்கடை பாபா காசிம் ஜும் ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர் .மேலும் ஒருவருக்கு ஒருவர் ஆரத் தழுவி, இனிப்புகள் வழங்கி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்-அதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையில் வாழ்த்துகளுடன் கொண்டாடினர்.

நாகர்கோவில் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு புதிய நிழற்குடை திறப்பு

நாகர்கோவில் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு புதிதாக கட்டப்பட்ட நிழற்குடை பயன்பாட்டிற்கு வந்தது. நாகர்கோவில் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு ரயிலில் வந்த பயணிகள் தங்கள் பகுதிக்கு செல்ல ரயில் நிலையத்தின் முன்பு காத்திருந்து பேருந்து வந்தவுடன் செல்வார்கள். இதுவரை அங்கு பேருந்து நிலையம் இல்லை ஆங்காங்கே நின்று செல்வார்கள். இது குறித்து ரயில் பயணிகள் பேருந்து நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதனால் அங்கு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வளாகத்தில் புதிய பேருந்து நிறுத்தத்துடன் கூடிய பயணிகள் நிழற்குடை வியாழனன்று பயன்பாட்டிற்கு வந்தது.

ஆன்லைனில் பழைய போனை விற்று மோசடி: ஐடி ஊழியருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி, மே 28- ஆன்லைனில் புதிய செல்போன் என கூறி பழைய போனை ஐடி ஊழியருக்கு விற்ற தனியார் விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20 ஆயி ரம் இழப்பீடு வழங்க நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. தென்காசி மாவட் டம் சங்கரன்கோவில் புதுமனை இரண்டாம் தெருவை சேர்ந்த காசி மகன் செல்வ கணேஷ் (25). இவர் பெங்களூர் நகரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். வீட் டில் இருந்தபடி வேலை செய்து வந்த இவர், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபல ஷாப்பிங் இணையதளத்தில் செல்போன் ஒன்றை ரூ.15 ஆயிரத்து 999 கொடுத்து வாங்கினார். சில மாதங்களில்அந்த செல்போனின் பின் பகுதி அடிக்கடி கழன்று வந்ததால் அவர் பழுது நீக்கும் மையத்திற்கு சென்றார். அங்கு போனை பரிசோதித்த ஊழியர்கள் இந்த போன் நீங்கள் வாங் கும் முன்பே ஆக்டிவேட் ஆகிவிட்டது என்றும் இதற் கான வாரண்டி முடிந்து விட்டது என்றும் கூறினர்.புதிய போன் என கூறி பழைய போனை கொடுத்து மோசடி செய்ததை அறிந்த செல்வ கணேஷ் இது குறித்து ஆன்லைனில் நிறு வனத்திடம் புகார் அளித்தார். அந்த நிறுவனம் போனுக்கான பணத்தை மட்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. ஆனால் அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க மறுத்து விட்டது. இதனால் பாதிக் கப்பட்ட செல்வகணேஷ், நெல்லை மாவட்ட நுகர் வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் ஆன்லைன் நிறுவனம் மற்றும் தனியார் விற்பனை நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களை அவர் எதிர்தரப்பாக சேர்த்து வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசா ரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகச பாபதி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். பழைய போனை புதியது என விற்றது நியாயமற்ற து.இதனால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரத்தை தனியார் விற்பனை நிறுவனம் வழங்க வேண் டும் என உத்தரவிட்டனர். மேலும் தனியார் விற்பனை நிறுவனம் ஒரு மாதத்திற்குள் வாடிக் கையாளருக்கு இழப்பீடு மற்றும் வழக்கு செலவு தொகையை வழங்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து அந்த தொகையை வழங்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் ஆன்லைன் நிறுவனம் மீதான வழக்கு தள்ளுபடி செய்தும் ஆணையம் உத்தரவிட்டது.

இரண்டு வயது குழந்தையிடம் ஒரு பவுன் தங்க கொலுசு திருட்டு

குழித்துறை, மே 28- மார்த்தாண்டத்தில் இரண்டு வயது குழந்தையிடம் ஒரு பவுன் தங்க கொலுசு திருட்டு போனது. மார்த்தாண்டம் மெயின் ரோட்டை சேர்ந்த பிரின்ஸ் ஜாக்சன் மனைவி அஜிஷா 32 இவர் சம்பத்தன்று மார்த்தாண் டம் காந்தி மைதானத்தில் தனது இரண்டு வயது குழந்தையுடன் பேருந்து ஏறுவதற்கு முயற்சி செய்து உள்ளார் கூட்டத்தை பயன்படுத்தி யாரோ குழந்தையின் ஒரு காலில் கிடந்த ஒரு பவுன் எடையுள்ள தங்க கொலுசை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் ஆகும். இது குறித்து இவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எம்.ஏ. பேபி கைது கண்டித்து நாகர்கோவிலில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,மே. 28- சிபிஎம் அகில இந்திய செயலாளர் எம் எ பேபி கைது செய்ததை கண்டித்து நாகர்கோவிலில் மாநகர குழு சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ஈடி ரெய்டு என்ற பெயரில் அத்துமீறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம் .ஏ பேபி உட்பட அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் டெல்லியில் போராடிய போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்ததை கண்டித்தும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர குழு சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு கட்சியின் சார்பில் மாநகர செயலாளர் எஸ். அருணாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசைன் துவக்கி வைத்தார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமோகனன் பேசினார். முடித்து வைத்து முன்னாள் எம்எல்ஏ எஸ். நூர்முகமது பேசினார். இதில் மாவட்ட குழு செயற்குழு உறுப்பினர் எஸ். அந்தோனி மாவட்ட குழு உறுப்பினர் கே. மோகன். மாநகரகுழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள், பேராசிரியர்கள் , சுமை சங்க தலைவர் ஐய்யப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.