தென்காசி எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு வீதி, வீதியாக நன்றி தெரிவித்தார்
18 May 2026, 10:45 pm
<p><strong>தென்காசி எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு வீதி, வீதியாக நன்றி தெரிவித்தார்</strong> </p><p>தென்காசி, மே.18- தென்காசி மாவட்டம், தென்காசி தொகுதி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் கலை கதிரவன் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பகுதிகளான மறுக்க லாங்குளம், பாலபத்திர ராமபுரம், ஊத்துமலை, ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பா ளரும், அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
