களப்பாகுளம் என்.ஜி.ஓ. காலனியில் தேங்கிய சாக்கடை கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடு சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
8 Aug 2026, 11:07 pm

களப்பாகுளம் என்.ஜி.ஓ. காலனியில் தேங்கிய சாக்கடை கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடு சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

தென்காசி, ஆக.8-தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, களப்பாகுளம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ. காலனி பகுதியில்யூனியன் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தெருவில் சாக்கடை நீர் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கிறது. இதனால் சுகாதாரச்சீர்கேடு நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேங்கிக்கிடக்கும் கழிவுநீரில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் தினமும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் கழிவுநீர் மேலும் தேங்கி சாலையில் ஓடி பொதுமக்கள் கடும்அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, களப்பாகுளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தேங்கிக்கிடக்கும் சாக்கடை நீரை அகற்றி, வடிகால்களை சீரமைக்கவேண்டும். குப்பைகளை அகற்றி கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அதிகாரிகள்விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.