தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் தரத்தை உயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் அமைச்சர் வி.கே.ராஜீவ் பேட்டி
27 Jun 2026, 11:19 pm
<p><strong>தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் தரத்தை உயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் அமைச்சர் வி.கே.ராஜீவ் பேட்டி</strong></p><p>தென்காசி, ஜூன் 27- தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சுற்றுச்சூழல் - கால நிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே. ராஜீவ் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ கட்டமைப்பு, ஆண் மற்றும் பெண் குழந்தை கள் பிறப்பு விகிதம், பள்ளி சிறார் நலத் திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களின் தேசிய தர நிர்ணயம், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான பணிகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வி.கே.ராஜீவ் பேசுகையில் , தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தென் காசி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் பல்வேறு துறைகளில் தொடர்ந்து முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட் டம் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டமாக இருப்பதால் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாகவும், அவற்றை குறைக்கும் நோக்கில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்காசி அரசு தலைமை மருத்துவ மனையின் தரத்தை உயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேவை யான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதி கள் கிடைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தென்காசி மாவட்ட மக்களின் நலனுக்காக தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முழு மையாக நிறைவேற்றப்படும் என்று உறுதி யளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பிரேமலதா, தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
