மின்வாரிய கள உதவியாளர்களுக்கு பயிற்சி
28 Jun 2026, 11:38 pm
<p><strong>மின்வாரிய கள உதவியாளர்களுக்கு பயிற்சி</strong></p><p><strong> </strong> தென்காசி, ஜூன் 27- தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பஞ்சா யத்தில் மின்வாரிய கள உதவி யாளர்களுக்கான மின் கம்பம் ஏறும் பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சியை குத்துக்கல்வலசை பஞ்சா யத்து தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஐடிஐ படித்த 23 பெண்கள் உட்பட 76 பேர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைப்பொதுச்செயலாளர் பீர்முகமது ஷா, நெல்லை மண்டல செயலாளர் வண்ணமுத்து, நெல்லை திட்டச் செயலாளர் கந்தசாமி,தென்காசி கோட்டச் செய லாளர் இளையராஜா, சிஐடியு தென்காசி மாவட்ட செய லாளர் மணிகண்டன், விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் வேலுமயில் ஆகியோர் பேசினர். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சு.பட்டமுத்து நன்றி கூறினார்.</p>
