தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சங்கரன்கோவில் அருகே சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

26 May 2026, 10:04 pm
சங்கரன்கோவில் அருகே  சிறுமியை பாலியல்  வல்லுறவு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
<p><strong>சங்கரன்கோவில் அருகே சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு</strong></p><p>தென்காசி, மே 26- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த நபருக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது தந்தை கோவை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தாய் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முருகன் (62) அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாயார் சங்கரன் கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை அதிகாரி வேளாங்கண்ணி உதயரேகா புலன் விசாரணை நடத்தி யதை தொடர்ந்து போலீசார் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேல் முன்னிலையில் நடை பெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி முருகனுக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி பி.ராஜவேல் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்க றிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.