கார்ப்பரேட் பஜார் : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் பாராட்டு
10 Oct 2026, 10:12 pm

கார்ப்பரேட் பஜார் : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தென்காசி, அக். 10-தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையில் உள்ள ஜோகோ நிறுவனக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வழங்கல் விற்பனை சங்கம் ஆகியவற்றின் சார்பில் கார்ப்பரேட் பஜார் (CORPORATE BAZAAR 2026-27) விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், விற்பனையை அதிகரித்தல் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வில் அதிக விற்பனை செய்து சாதனை படைத்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.