கிராமத்திற்கான அடிப்படை வசதிகள், குறைகளை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும் கிராம சபையில் ஆட்சியர் மோனிகா ராணா பேச்சு
1 Nov 2026, 10:52 pm

கிராமத்திற்கான அடிப்படை வசதிகள், குறைகளை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும் கிராம சபையில் ஆட்சியர் மோனிகா ராணா பேச்சு

தென்காசி, நவ.01- நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நயினாரகரம்ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா கலந்து கொண்டு பேசியதாவது:கிராமத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மாதத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அந்தந்தப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் பணியில் இருப்

பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், பெயரில் பிழை உள்ளவர்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியவர்கள் இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் சுமார் 95 சதவீதம் பெண்கள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அனைத்துக்கூட்டங்களிலும் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். நாட்டைத் தூய்மையாக மாற்றுவதற்கான முயற்சியை முதலில் நமது ஊராட்சியில் இருந்தே தொடங்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குவதுடன் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஊக்கமளிக்கவேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குழந்தைத் திருமணம் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் குழந்தைகள் உதவி எண்ணில் புகார் தெரி

விக்க வேண்டும். நான் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று நாட்கள்தான் ஆகின்றன. எனவே, உங்கள் கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தயக்கமின்றித் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.