குறைதீர் கூட்டத்தில் 347 மனுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்
18 May 2026, 10:47 pm
<p><strong>குறைதீர் கூட்டத்தில் 347 மனுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்</strong></p><p>தென்காசி, மே. 18- தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
