முந்தய பக்கம்

தென்காசி: பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்

24 Nov 2025, 8:15 am
தென்காசி: பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
<p>தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.<br /> தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயரிழப்பு. சிறுவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யும்படி அம்மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram