தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

33 minutes before
தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, நவ. 21 -தமிழ்நாடு திருக்கோயில் தொழி லாளர்கள் யூனியனின், கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடங்கிவைத்து மாநிலத் தலைவர் மா.பரணிதரன் பேசி னார். அப்போது, நகர ஈட்டுப்படி, வீட்டு வாடகைப்படியை உயர்த்த வேண்டும், 5 ஆண்டு நிறைவு செயலர் தின கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், மாநில மைய நிதியை உருவாக்கி ஒன்றாம் தேதியே சம்பள வழங்க வேண்டும், உள்துறை பணியாளருக்கு விடுப்பு சம்பளம் வழங்கு தல், ஓய்வு பெற்ற பணியாளருக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 7ஆயிரதது 850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொதுச் செயலாளர் சு.தனசேகர் பேசுகையில், வெளி முகாமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யும் நட வடிக்கையை கைவிட வேண்டும், கோயில் பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்தால் விரைவு தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும், அனைத்து வகை கட்டணங்களில் இருந்தும் விலக்களிக்க வேண்டும். சங்கத்திற்கு ஆணையர் அலுவலகத்தில் அலுவலகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமாரிடம் சங்கத்தின் தலைவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மாவட்ட காப்பாளராக பார்த்தசாரதி, தலைவராக ஆழ்வார், கௌரவ தலை வராக சக்திவேல், செயல் தலைவராக ராஜ்குமார், செயலாளராக முத்துக்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.