தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொங்கல் கருணைக்கொடையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்குக! கோயில் தொழிலாளர்கள் யூனியன் கோரிக்கை

28 Sept 2026, 1:06 am
பொங்கல் கருணைக்கொடையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்குக! கோயில் தொழிலாளர்கள் யூனியன் கோரிக்கை

பொங்கல் கருணைக்கொடையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்குக! கோயில் தொழிலாளர்கள் யூனியன் கோரிக்கை

சென்னை, செப். 27 –பொங்கல் கருணைக் கொடையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மண்டல பொதுக்குழு ஞாயிறன்று (செப்.27) திருப்போரூரில்நடைபெற்றது. த.ஜெயக்குமார், அ.விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாநில கௌரவ தலைவர் முத்துசாமி, தலைவர் மா.பரணிதரன், பொதுச் செயலாளர் சு.தனசேகர், காப்பாளர் பி.கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தாம்பரம்இரா.இரமேஷ், மகளிர் அணி துணைச்செயலாளர் பா.தனலட்சுமி, இணைச்செயலாளர் ந.வெற்றிவேல் முருகன், துணை அமைப்பாளர் டி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

நிர்வாகிகள் தேர்வுசெங்கல்பட்டு மாவட்ட காப்பாளராக ஶ்ரீநிவாசன், கவுரவ தலைவராக ஆர்.கண்ணன் ஸ்ரீராம் பட்டாச்சாரியார்,செயல் தலைவராக பற்குணம், தலைவராக ஞானமூர்த்தி, செயலாளராக மூர்த்தி, பொருளாளராக விஜயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளராக ராமு,கவுரவ தலைவராக வடிவேல், செயல் தலைவராக விஸ்வநாத குருக்கள், தலைவராகஜெயக்குமார், செயலாளராக மணிகண்டன்,பொருளாளராக சுகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.