முந்தய பக்கம்

அரசு நிறுவனத்தில் கோவில் நிதி முதலீடா? உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

20 May 2026, 11:16 pm
அரசு நிறுவனத்தில் கோவில் நிதி முதலீடா? உயர் நீதிமன்றம்  நோட்டீஸ்

அரசு நிறுவனத்தில் கோவில் நிதி முதலீடா? உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கோவில் உபரி நிதியை தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை 2026 பிப்ர வரியில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கோவில் சொத்துக்களும் நிதியும் பாதுகாக்கப் படுவதற்காக இயற்றப்பட்ட அறநிலையத்துறை சட்டத் திற்கு முரணாக இந்த அரசாணை அமைந்துள்ள தாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

சுமார் 2,700 கோடி ரூபாய் கோவில் நிதி சட்டவிரோதமாக அரசு நிறுவனங் களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் கோவில்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறு வனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Share
FacebookXWhatsAppTelegram