தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க வரி விதிப்பினால் நலிவடைந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க நிதியமைச்சரிடம் டீமா கோரிக்கை

14 Nov 2025, 1:26 pm
அமெரிக்க வரி விதிப்பினால் நலிவடைந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க நிதியமைச்சரிடம் டீமா கோரிக்கை
<p><strong>அமெரிக்க வரி விதிப்பினால் நலிவடைந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க நிதியமைச்சரிடம் டீமா கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், நவ.14 - &nbsp;அமெரிக்காவின் 50 சதவிகித கூடு தல் அபராத வரி விதிப்பினால் நலிவ டைந்துள்ள சிறு, குறு தொழில்களுக்கு &nbsp;போர்க்கால அடிப்படையில் சிறப்பு சலு கைகளை வழங்க வேண்டும் என்று டில் லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றக் கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லியில் புதனன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலை மையில் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்குண்டான தேவை கள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது அதில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் உற்பத்தியாளர் சங்கத்தின் சார் பில் நிதி ஆலோசகர் எல்.சங்கர்தேவ் கலந்து கொண்டார். சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு உரிய தேவைகளை எடுத்துரைத்தார். முக்கியமாக தற் போது ஏற்பட்டுள்ள அமெரிக்க வரி &nbsp;விதிப்பினால் பாதிப்பையும், அதிலி ருந்து மீள்வதற்குண்டான வழிமுறை களையும் எடுத்துரைத்தார். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு வங்கிகளிடமிருந்து வட்டி குறைத்து வழங்க வேண்டும், நலிவடைந்த நிறுவ னங்களுக்கு போர்க்கால அடிப்படை யில் சிறப்பு சலுகைகள் வழங்க முன்வர &nbsp;வேண்டும், வங்கிகள் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் கொடுக்க முன் &nbsp;வருகிறார்கள். ஆனால் நிறைய நிறுவ னங்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக &nbsp;இருக்கும் நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு சிவில் ஸ்கோர் 500 புள்ளி &nbsp;அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மீண்டும் தொழில் செய்வதற்கு உண்டான சூழல் &nbsp;ஏற்படும். புதிய சந்தை உருவாக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே தொழில் துறையின ருக்கு ஊக்கத் தொகையை அதிகரிக்க &nbsp;வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக டீமா சங்கத் தலைவர் எம். பி.முத்துரத்தினம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் கூறியிருக்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.