தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்புத்தர ஆட்சியர் வேண்டுகோள்

22 Jan 2026, 2:57 pm
உங்க கனவ சொல்லுங்க திட்டம்: தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்புத்தர ஆட்சியர் வேண்டுகோள்
<p><strong>உங்க கனவ சொல்லுங்க திட்டம்: தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்புத்தர ஆட்சியர் வேண்டுகோள்</strong></p> <p>&nbsp; நாகர்கோவில்,ஜன.22- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரா ட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் உங்க கனவ சொல்லுங்க &nbsp;திட்ட தன்னார்வலர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, திட்டம் குறித்து விளக்கம் அளித்து, விண்ணப்ப படிவங்க ளை நிரப்பி தன்னார்வலர்கள் திரும்ப பெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் உள்ள மொத்தம் &nbsp; &nbsp;ஊரக பகுதிகளில் &ndash; 2,05,262 குடும்பங்களையும், நகர்புறங்களில் 2,92,522 என மொத்தம் 4,97,784 குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள ஊர கப்பகுதிகளுக்கு 470 தன்னார்வலர்களும், நகர்ப்புறங்க ளுக்கு 587 தன்னார்வலர்களும் என மொத்தம் 1057 &nbsp;தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. &nbsp;ஒரு குடும்பத்தின் கனவு என்ன என்பதை தெரிந்து கொள்ள, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களாகிய நீங்கள் எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என அதில் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்லாது, உங்களின் மூன்று கனவுகள் என்ன எனவும் கேட்பர். இரண்டு நாட்களுக்கு பின், அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூர்த்தி செய்யப் பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொ பைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும். அதன் ஒருபகுதியாக நாகர்கோவில் மாநகராட்சி க்குட்பட்ட குடியிருப்புகளில் உங்க கனவ சொல்லுங்க திட்ட &nbsp;தன்னார்வலர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, திட்டம் குறித்து விளக்கம் அளித்து, விண்ணப்ப படிவங்க ளை நிரப்பி, &nbsp;திரும்பப் பெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. &nbsp;கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை கைப்பேசி செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. &nbsp; கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கனவு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து, இத்திட்டம் குறித்த விவரங்கள் சேகரிக்கும் போது, முழு ஒத்துழைப்பு தர பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.